இடுகைகள்

திருமலை கல்வெட்டுகள்

இங்கு திருமலையில் கண்டெடுக்கப்பட்ட 26 கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன். அவற்றின் கல்வெட்டுசி செய்தி, அரசர், காலம், இடம், கல்வெட்டுப் பாடம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.  இங்கு  கீழ்கண்ட ஆட்சியாளர்களுடைய கல்வெட்டுகள் கால வரிசைப்படி காணப்படுகின்றன . முதலாம் பராந்தக சோழன் (1) ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன் (எ) மூன்றாம கிருஷ்ணன் (2) சுந்தர சோழன் (1) முதலாம் இராஜராஜ சோழன் (3) முதலாம் ராஜேந்திர சோழன் (3) இரண்டாம் ராஜேந்திர சோழன் (1) அதியமான் விடுகாதழகிய பெருமாள் (2) மூன்றாம் ராஜராஜ சோழன் (சிற்றரசன் இராஜகம்பீரச் சம்புவராயன்)  (1) வீரபாண்டியன் (1) ராஜநாராயண சம்புவரையர் (1) ஓம்மண உடையார் (1) இரண்டாம் தேவராயர் (1) மல்லிகார்ஜுனராயர் (1) ஆட்சியாளர் தெரியாத கல்வெட்டுகள் (7) - இவற்றுள் இரண்டு 9 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியையும், ஒன்று 18-19 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியையும் கொண்டுள்ளன. 1. எண் 66 of SI vol I அரசர், காலம்: முதலாம் ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (பொ.ஆ, 1006. இந்த ஆட்சியாண்டில்தான் புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடுகள...

தா. மோட்டூர் - கூத்தாண்டவர் / தாய் தெய்வம் / விசிறிக்கல்

படம்
திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் இருக்கும் தா மோட்டூர் சிற்ப மாதிரி விசிறிக்கல், பறவைக்கல் என்னும் பெயர்களில் அழைக்கப்படும் சிற்பம் கல்லில் வடிக்கப்பட்ட, தொன்மையான, பெரிய அளவிலான, குறியீட்டுச் சிற்பமாகும். இந்தச் சிற்பம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகவும் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும், தாய்த்தெய்வ வழிப்பாட்டின் முன்னோடியாகவும் கருதப்படுகிறது. இடங்கள் தமிழகத்தில் இரண்டு இடங்களில் விசிறிக்கல் கிடைத்துள்ளது. தா மோட்டூர் - திருவண்ணாமலை மாவட்டம் உடையாநத்தம் - விழுப்புரம் மாவட்டம் தா மோட்டூர் அமைவிடம் திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ள ஊர் தானிப்பாடி. தானிப்பாடியில் இருந்து சுமார் சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ளது தா வேளூர். அவ்வூருக்குச் செல்லும் சாலை தானிப்பாடி பேருந்து நிறுத்தத்தின் முன் பிரிகிறது. தா. வேளூர் பக்கத்தில் இருக்கும் ஒரு  கிராமம் தா மோட்டூர் (தானிப்பாடி மோட்டூர்). தென்பெண்ணையாற்றின் தெற்கே அமைந்துள்ளது. ஊரில் இருந்து ஒரு கரடுமுரடான பாதை வழியாக விசிறிக்கல் இருக்கும் இடத்தை அடையலாம். கடைசியில் வயல்கள் ஊடாக...