திருமலை கல்வெட்டுகள்

இங்கு திருமலையில் கண்டெடுக்கப்பட்ட 26 கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன். அவற்றின் கல்வெட்டுசி செய்தி, அரசர், காலம், இடம், கல்வெட்டுப் பாடம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

இங்கு கீழ்கண்ட ஆட்சியாளர்களுடைய கல்வெட்டுகள் கால வரிசைப்படி காணப்படுகின்றன .

  • முதலாம் பராந்தக சோழன் (1)
  • ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன் (எ) மூன்றாம கிருஷ்ணன் (2)
  • சுந்தர சோழன் (1)
  • முதலாம் இராஜராஜ சோழன் (3)
  • முதலாம் ராஜேந்திர சோழன் (3)
  • இரண்டாம் ராஜேந்திர சோழன் (1)
  • அதியமான் விடுகாதழகிய பெருமாள் (2)
  • மூன்றாம் ராஜராஜ சோழன் (சிற்றரசன் இராஜகம்பீரச் சம்புவராயன்) (1)
  • வீரபாண்டியன் (1)
  • ராஜநாராயண சம்புவரையர் (1)
  • ஓம்மண உடையார் (1)
  • இரண்டாம் தேவராயர் (1)
  • மல்லிகார்ஜுனராயர் (1)
  • ஆட்சியாளர் தெரியாத கல்வெட்டுகள் (7) - இவற்றுள் இரண்டு 9 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியையும், ஒன்று 18-19 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியையும் கொண்டுள்ளன.

1. எண் 66 of SI vol I

அரசர், காலம்: முதலாம் ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (பொ.ஆ, 1006. இந்த ஆட்சியாண்டில்தான் புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடுகள் (லெய்டன் செப்பேடுகள்) வெளியிடப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது).

இடம்: திருமலை அடிவார கோபுரத்திற்கு எதிரே புதைந்துள்ள பாறை

கல்வெட்டுச் செய்தி:

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் அக்காலத்தில் வைகை என்று அழைக்கப்பட்ட திருமலையில் இருந்த பள்ளியில் இருந்தவர் குணவீரமாமுனிவர். இவர் பெரிய ஏரிக்கு மதகு அமைத்து ஊரை வளப்படுத்தினார். இந்தக் கல்வெட்டில் முதலாம் ராஜராஜனின் மெய்கீர்த்திக்கு அடுத்து ஒரு அழகிய விருத்தப்பாவாக இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் குணவீர மாமுனிவர் வச்சிரநந்தி மாலையை அளித்த, 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த குணவீர பண்டிதர் என்ற கருத்தும் உள்ளது.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ திருமகள் பொலப்பெரு நிலச்செல்-
  2. வியுந்த1னக்கெயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தூளுர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங்கங்கபாடியு
  3. நுளம்பபாடியுந் தடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர விழமண்டலமும் திண்டிறல் வென்றித்த-
  4. ண்டாற்கொண்ட[த்தெ]ழில் வளருழி எல்லாயாண்டும் தொழுதெழ விளங்கு யாண்டெ செழிஞரைத்தெசு கொள் ஸ்ரீகொவி-
  5. ராஜஇராஜகேசரிபன்மரா[ன ஸ்ரீ]இராஜஇராஜதேவர்க்கு யாண்டு ௨௰௧ ஆவது அலை புரியும் புனற்பொன்னி ஆறுடைய சொழன்
  6. அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்றுங்கலை புரியுமதிநிபு4ணன் வெண்கிழான்
  7. கணிச்செக்கர மருபொற்சூரியன்றன் நாமத்தால் வாமநிலை நி[ற்ற]குங்-
  8. கலிஞ்சிட்டு நீமிர் வைய்கை மலைக்கு நீடுழி இரு மருங்கும் நெல் விளைய
  9. க்கண்டொன் குலை புரியும் படை அரைசர் கொண்டாடும் பாதன் குணவீரமாமுநிவன்
  10. குளிர் வைய்கைக்கொவெய்
கல்வெட்டு பாடல்

அலைபுரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன்
    அருள் மொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்றும்
கலைபுரியும் மதிநிபு4ணன் வெண்கிழான் கணிச்சேகர
    மருபொற் சூரியன்றன் நாமத்தால் வாழ்
நிலை நிற்றகுங் கலிஞ்சிட்டு நிமிர் வைய்கை மலைக்கு
    நீடுழி இரு மருங்கும் நெல் விளையக் கண்டோன்
குலை புரியும் படை அரைசர் கொண்டாடும் பாதன்
    குணவீரமாமுநிவன் குளிர் வைய்கைக் கோவெய்


-- 0 --


2. எண்: 67 of SI vol I

அரசர், காலம்: முதலாம் ராஜேந்திர சோழனின் 12-வது ஆட்சியாண்டு கல்வெட்டு. (பொ.ஆ. 1024)

இடம்: திருமலை உச்சியில் உள்ள பாறை

கல்வெட்டுச் செய்தி

11 வரி மெய்கீர்த்திக்குப் பிறகு 3 வரி செய்தி: முதலாம் ராஜேந்திர சோழனின் 12-வது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து பங்களநாட்டு நடுவில் வகை முகைநாட்டில் உள்ள பள்ளிச்சந்தமான வைகவூரில் உள்் திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீகுந்தவை ஜிநாலயத்தின் தேவருக்கு பெரும்பாணப்பாடிக் கரைவழி மல்லியூர் என்ற ஊரில் இருக்கும் வியாபாரி நன்னப்பய்யன் என்பவரது மணவாட்டி சாமுண்டப்பை திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு காசு இருபதும் திருவமுதுக்கு காசு பத்தும் வைத்தார்.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ திருமன்னி வளரவிரு [நி]லமடந்தை1யும் பொர்ச்சயப்பாவையுஞ் சீர்த்தனிச்செல்வியுந்தன் பெருந்தெவியராகி இன்புறு நெடு தியல் ஊழியுள் இடைது-
  2. றைநாடுந்துடர் வனவெலிப்படர் வனவாசியுஞ்சுள்ளிச்சூழ் மதிட்கொள்ளிப்பாக்கையு நண்ணற்கரு முரண் மண்ணைக்கடக்கமும் பொரு கடல் ஈழத்தரசர் தமுடியும் ஆங்க-
  3. வர் தெவியரொங்கெழின்முடியுமுன்னவர் ப[க்]கல்த்தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரநாரமுந்தெண்டிரை ஈழமண்டலமுழுவதும் எறி படைக்கொளர்
  4. முறைமையிற்சூடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ்செங்கதிர் மாலையுஞ்சங்கதிர் வெலைத்தொல் பெருங்காவற்பல பழந்திவுஞ்செருவிற்சென-
  5. வில் இருபத்தொரு காலரைசுகளை கட்ட பரசுராமன் மெவருஞ்சாந்திமத்திவவரண் கருதி இருத்திய செம் பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழி மிக முசங்கியில் மு-
  6. துகிட்டொளித்த சயசிங்கன் அளப்பெரும் புகழொடும் பீடியல் இரட்டபாடி ஏழரை இலக்கமு நவநெதிக்குலப் பெருமலைகளும் விக்கிரமவீரர் சக்கரகொட்டமு-
  7. முதிரபடவல்லை மதுரமண்டலமும் காமிடைவளைய நாமணைக்கொணமும் வெஞ்சிலைவீரர் பஞ்சப்பள்ளியும் பாசுடைப்பழநன்மாசுணிதெசமும் அயர்வி-
  8. ல் வண் கிர்த்தியாதிநகரவையிற் சந்தி1ரன்றொல் குலத்திரதரனை விளையமர்க்களத்துக்கிளையொடும் பி[டித்]துப்பல தனத்தொடு நிறை குலதன[க்]குவை-
  9. யுஞ் சிட்டருஞ்செறி மிளையொட்ட விஷையமும் பூசுரர் செர் நல்க்கொசலைநாடு ந்த1ன்மபாலனை வெம் முனையழித்து வண்டுறை சொலைத்தண்டுயுத்தியுமிரண-
  10. சூரனை முரணுறத்தாக்கித் திக்கணை கிர்த்தித்தக்கணலாடமுங் கொவிந்த1சந்த1ன் மாவிழிந்தொ1டத் தங்காத சாரல் வங்காளதெசமுந்தொ1டு கடற்சங்குகொட்டன் மஹீபாலனை
  11. வெஞ்சம வளாகத்தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமு நித்திலநெடுங்கடலுடுத்தி[ர]லாடமும் வெறி மணற்றிர்த்தத்தெறி புனற்கங்கையு மா[ப்]
  12. பொரு தண்டாற்கொண்ட கொப்பரகெசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜேந்த்ரசோழதேவற்கு யாண்டு ௰௨ ஆவது [ஜ]யங்கொண்டசொழமண்டலத்து பங்களநாட்டு நடுவில்
  13. வகை முகைநாட்டுப்பள்ளிச்சந்த1ம் வைகவூர்த்திருமலை ஸ்ரீகுந்த1வைஜிநாலயத்து தே3வற்குப் பெரும்பாணப்பாடிக்கரைவழிமல்லியூர் இருக்கும் வ்யா-
  14. பா1ரி நந்நப்பயன் மணவாட்டி சாமுண்டப்பை வைத்த திருநந்தா1விளக்கு ஒன்றிநுக்குக்காசு இருபதும் திருவமுதுக்கு வைத்த காசு பத்தும்

-- 0 --


3. எண்: 68 of SI vol I

அரசர், காலம்: முதலாம் ராஜேந்திர சோழனின் 12-வது ஆட்சியாண்டு கல்வெட்டு. (பொ.ஆ. 1024)

இடம்: கோபுரத்திற்கும் ஓவியங்கள் உள்ள குகைக்கும் இடையில் உள்ள படிகளின் கீழ் உள்ள பாறை

கல்வெட்டுச் செய்தி

முதலில் வரும் 22 வரி மெய்கீர்த்தி சிறு மாற்றங்களுடன் முந்தைய கல்வெட்டில் உள்ளது போலவே உள்ளது. அதற்குப் பிறகு வரும் 4 வரி செய்தி இரு பெண்கள் இரு நந்தாவிளக்குகளுக்காக அளித்த கொடையை பதிவு செய்கிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் 12-வது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து பங்களநாட்டு நடுவில் வகை முகைநாட்டில் உள்ள பள்ளிச்சந்தமான வைகவூரில் உள்ள திருமலையில் உள்ள தேவருக்கு இளையமணிநங்கை என்பவர் நிலம் ஒன்றைத் திருத்தி அதைக் கொண்டு இந்தப் பள்ளியின் இறைவனான ஆரம்ப நந்திக்கு தினமும் ஒரு நந்தா விளக்கு எரிக்க இருபது காசு கொடுத்தார். பல்லவ அரசரின் தேவியார் சிண்ணவையார் நந்தாவிளக்கு ஒன்றுக்கு 60 காசு கொடுத்தார். இந்த தர்மங்கள் சந்திர சூரியன் உள்ளவரை நிலைக்கும் எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்டன.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ திருமன்னி வளர இரு [நி]லமடந்தையும் பொர்ச்ச
  2. யப்பாவையுஞ் சீர்த்தனிச்செல்வியுந்தன் பெருந்தெவியராகி இன்பு
  3. ற நெடு தியல் ஊழியுள் இ[டை]துறைநாடுந்துடர் வனவெலி
  4. ப்பட[ர் வ]னவாசியுஞ்சுள்ளிச்சூழ் மதிட்கொள்ளிப்பாக்கையு நண்
  5. ணற்கரு மு[ர]ண் மண்ணைக்கடக்கமும் பொரு கடல் ஈழத்தரசர் தமுடியும் ஆங்க-
  6. வர் தெவியரொங்கெழில் முடியும் முனவர் பக்கல்த்தென்னவர் வைத்த சுந்
  7. தரமுடியும் இந்திரநாரமுந்தெண்டிரை ஈழமண்டலமுழுவதும் எறி படைக்கொள
  8. ர் முறைமையிற் சூடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ்செங்கதிர் மாலையுஞ்
  9. சங்கதிர் வெலைத்தொல் பெருங்காவற்பல பழந்திவுஞ்செருவிற்செனவில் இருப
  10. த்தொரு காலரைசுகளை கட்ட பரசுராமன் மெலருஞ்சாந்திமத்திவவரண் கரு
  11. தி இருத்திய செம் பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழி மிக முசங்
  12. கியில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பெரும் புகழொடும் பிடிய
  13. ல் இரட்டபாடி ஏழரை இலக்கமு நவநெதிக்குலப் பெருமலைகளும் விக்கிரமவி
  14. ரர் சக்கரகொட்டமுமுதிரபடவல்லை மதுரமண்டலமும் காமிடைவளைய நாமணைக்கொண
  15. மும் வெஞ்சிலைவிரர் பஞ்சப்பள்ளியும் பாசுடைப்பழநன்மாசுணிதெசமுமயர்
  16. வில் வண் கிர்த்தி ஆதிநகரவையிற் சந்தி1ரன்றொல் குலத்திரதரனை விளையமர்க்[க]ளத்து
  17. க்கிளையொடும் பிடித்துப்பல தனத்தொடு நிறை குலதனக்குவையுஞ் சிட்டருஞ்செறி மிளை
  18. யொட்ட விஷயமும் பூசுரர் செர் நல்க்கொசலைநாடுந்த1ன்மபாலனை வெம்முனையழித்து வண்டு
  19. றை சொலைத்தண்டயுத்தியுமிரணசூரனை முரணுறத்தாக்கித் திக்கணை கிர்த்தித்தக்கணலாடமுங் கொவிந்த1சந்த1ன்
  20. மாவிழிந்தொ1டத் தங்காத சாரல் வங்காளதெசமுந்தொ1டு கடற்சங்குவொடன் மஹிபாளனை வெஞ்சமர் வளா[க]
  21. த்தஞ்சுவித்தருள ஒண்டில் யானையும் பெண்டிர் பண்டாரமு நித்தலநெடுங்கடலுத்திரலாடமும் வெறி மணற்றி[ர்]
  22. த்தத்தெறி புனற்கங்கையுமா[ப்]பொரு தண்டாற்கொண்ட கொப்பரகெசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜேந்த்ரசோழு
  23. தேவற்கு யாண்டு யஉ ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்துப் பங்கள நாட்டு நடுவில் வகை முகைநாட்டுப்பள்ளி-
  24. ச்சந்தம் வைகவூர்த்திருமலை தேவற்கு இளையமணிநங்கை வைத்த திருநந்தா1விளக்கொன்று இதற்கு பூ4மி திருத்தக்குடுத்த
  25. காசு இருபது இப்பூமியால் சந்த்3ராதி3த்தவறை இவ்விளக்கு இப்பள்ளி உடைய ஆரம்பனந்திக்கு நித்தம் நந்தா1விளக்கொன்று-
  26. ம் ப1ல்லவரசர் தே3வியார் சிண்ணவையார் சந்த்3ராதி3த்1யவற வைத்த நந்தா1விளக்கொன்றுக்கு குடுத்த காசு அறுபது
-- 0 --


4. எண்: 69 of SI vol I

அரசர், காலம்: வீரபாண்டிய தேவரின் 10-வது ஆட்சியாண்டு (பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டின் இறுதி)

இடம்: திருமலை அடிவார மண்டபச் சுவரில் இடதுபுறம்

கல்வெட்டு:
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ கொமாறபன்மர் த்1ரிபு4வநசக்1ரவர்த்தி ஸ்ரீவிரபாண்டியதெவர்க்கு
  2. யாண்டு பத்தாவது வைகைத்திருமலை மதகெரிக்கு கலிங்கு கட்டிவித்தான் ரா
  3. ஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடிநாட்டு பாண்{டை]யூர்மங்கலங்கிழான்
  4. அம்பலப்பெருமாளான சினத்தரையன் த4ர்ம்மோயந்ந்ஜயது ௨
(த4ர்ம்மோயந்ந்ஜயது = இந்த தர்மம் வெற்றி பெறட்டும்.)


-- 0 --


5. எண்: 70 of SI vol I

அரசர், காலம்: ராஜநாராயண சம்புவராயரின் 12-வது ஆட்சியாண்டு (பொ.ஆ. 1350)

இடம்: திருமலை அடிவார மண்டபச் சுவரில் வலதுபுறம் உள்ள முதல் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:

பொன்னூரைச் சேர்ந்த மன்னைப் பொன்னாண்டை என்பவரின் மகளான நல்லாத்தாள் என்பவர், வைகைத் திருமலையில் 'விஹார நாயனார் பொன்னெயில் நாதர்' என்ற சமணத் தீர்த்தங்கரர் திருமேனியை (சிலையை) எழுந்தருளச் செய்ததை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ ராஜநாராயணன் சம்புவராஜர்க்கு யா
  2. ண்டு ௰௨ வது பொன்னூர் மண்ணை பொன்னாண்டை
  3. மகள் நல்லாத்தாள் வைகைத்திருமலைக்கு எறியருள-
  4. ப்பண்ணின ஸ்ரீவிஹாரநாயனார் பொன்னெயில்-
  5. நாத2ர் தர்மம்
-- 0 --


6. எண்: 71 of SI vol I

அரசர், காலம்: ?

இடம்: திருமலை அடிவார மண்டபச் சுவரில் வலதுபுறம் உள்ள இரண்டாம் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:

அருள்மொழிதேவர்புரத்தில் வசிக்கும் இடையாறன் அப்பன் என்பவரின் மூத்த மகன் உள்ளிட்டார் சிற்றினங்கை என்பவளின் நினைவாக கிணறு (துரவு) தர்மம் செய்தது.

கல்வெட்டு:
  1. சிற்றினங்கைக்கு இட்ட துரவு அருள்மொழிதெவர்புரத்து
  2. இடையாறன் அப்பன் பெரிய பிள்ளை உள்ளிட்டார் தன்-
  3. மம்
-- 0 --


7. எண்: 72 of SI vol I

அரசர், காலம்: வீர-கம்பண-உடையாரின் பேரனும் கம்பண-உடையாரின் மகனுமான ஒம்மண உடையார்; சக ஆண்டு 1296 (பொ.ஆ. 1374)

இடம்: திருமலை அடிவார மண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:

இராஜகம்பீர-சதுர்வேதி-மங்கலம் என்று அழைக்கப்படும் சம்புகுல-பெருமாள்-அகரத்தின் ஊராரிடமிருந்து 
துளுநாட்டில் இருக்கும் அலசுநாட்டைச் சேர்ந்த விஷ்ணு-கம்புளி-நாயக்கர் என்பவர் 32 காணியான 4000 குழி நிலமும் 2000 குழி கொல்லையும் 06 மனைகளும் 40 பொன் கொடுத்து வாங்கியுள்ளார். . இவ்வூர் ஜயங்கொண்ட-சோழ-மண்டலத்தின் ஒரு பகுதியான பலகுன்றக் கோட்டத்தின் பிரிவான மண்டைகுல-நாட்டில் உள்ள முருகமங்கலப் பற்றைச் சேர்ந்ததாகும். ஒரு காணிக்கு 125 குழி என்ற கணக்கு பின்பற்றப் பட்டுள்ளது. அவை அமைந்த இடங்கள், எல்லைகள், நீர்ப்பாசனம் ஏற்படுத்தும் பொறுப்பு, விற்கவும் ஒற்றிக்கு வைக்கவும் உரிமை, குறை எதுவும் இல்லை என்றும் இருந்தால் சரி செய்து கொடுப்போம் என்றும் விற்றவர்கள் பொறுப்பு, ஆவணம் தயாரித்தவர், பொறித்தவர் பெயர்கள், ஊரார் கையெழுத்துகள் ஆகியவையும் பதிவாகி உள்ளன.

கல்வெட்டு:
  1. சுப4மஸ்து1 ஸ்வஸ்தி1 ஸ்ரீமந்மஹாமண்டலி[க]ன் அரிராயவிபாடன் பாஷைக்கு தப்புவ ராயர் கண்டன் பூறுவத3க்ஷி
  2. ண ப1ச்சி1மோத்தர ஸ[மு]த்3ராதி4பதி ஸ்ரீீவிரகம்பணஉடை[யர்] குமார ஸ்ரீகம்பண உடையர் குமாரர் ஸ்ரீஒம்மண உடை-
  3. யற்கு ப்ருத2வீ ராஜ்யம் செல்லா நின்ற செகாப்3த3ம் ௲௨௱[௯௰]௬ மேல் செல்லா நின்ற ஆனந்தவருஷம் த4நுநாயற்று பூ1ர்வ்வப1க்ஷத்-
  4. து அட்டமியும் திங்கள் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் செயங்கொண்ட சொழமண்டலத்துப் பலகுன்றக்கொட்ட
  5. த்து மண்டைகுளநாட்டு முருகமங்கலப்பற்று சம்புகுலப்பெருமாள் அகர[ம்[மான
  6. இராசகெம்பீரச்சறுர்வேதி3மங்கலத்து மஹாஜநம் துளுநாட்டுக்குள்ளு அலசுநாட்டு ஒளமுகையமனம் ஒக்கல் வழி தெயவத்தி அடவளநர் அளிய ஸ்ரீவிஷ்ணு-
  7. கம்புளிநாயக்கற்கு நிலவிலை ப்ரமா[ம]ணம் பண்ணிக்குடுத்த[படி] இவ்வகரத்துத் தெந்கழனியில் ராஜக3ம்பி4ரந் கண்ணாற்றில்
  8. குடமாவடி சூழ்ந்த சிறுப்பிள்ளார் பாள் அரை மாவில் மெலைவரப்புக்கு கிழக்கு [* இக்கண்ணாற்றுக்கு வடக்கு சிங்கர் அ[ரை
  9. மாவில் மெலைவர[ப்]புக்கு கிழக்கு * இவ்வரைமாவில் வரப்புச்செவ்வைக்குத் தெற்கு * நறுவிலி அடி அரைமாவில் கி
  10. [ழை]வாப்புச் செவ்வைக்கு [மெற்]கு [* இதன் தென்கிழக்கு அத்[தி]அ(ப்ப) அரைமாவில் வடக்கு வாப்புக்கு .......... கை[யான]*
  11. மெலைக்காணியில் கீழைவாப்புச்செவ்வைக்கு மெற்கு * இக்கண்ணாற்றுக்கு தெற்கு பொற்கட்டி ............ யில் (கீ)வர
  12. ப்புச்செவ்வைக்கு மெற்கு * இன்னிலத்தில் தெற்கில் பெரிய மஞ்சு மெல் தலை [வற] வடக்கும் * இதுக்கு உட்பட்ட காணி ௰௮ ........... களும் ரா
  13. ஜக3ம்பீ4ரந் வதிக்கு மெற்கு கண்ணாற்று வடக்கு காணி ௭ உம் இக்கண்ணாற்றுக்கு தெற்கு காணி ௬ உம் ஆக காணி
  14. ௩௰௨ னால் குழி ௪௲ இக்குழி நாலாயிரமும் * கொல்லையாவது வடகாட்டில் பெருமாங்கொன் கொல்லை சூழ்ந்த குழி ௲௫௱ ம் *
  15. ஆற்றங்கரை உடந் [செ]ர் ... வெலங்கொல்லையி[லெ] குழி ௫௱ ம் * இக்குழி ௨௲ ம் இக்குழி இரண்டாயிரமும் * மனையாவ[து] தெற்குத்தெரு
  16. வில் தென்சிறகில் கீழ்தலைமனையிரண்டு விட்டு மெற்கு மனையிரண்டும் பள்ளித்தெருவில் கீழ்சிறகில் தென்தலைமனையிரண்-
  17. டும் * குடமாவுக்கு வடக்கு ந .. க்கொல்லையில் ஏற்றின குடி இவருதா[கவும் * இன்னி]லத்துக்கும் கொல்லைக்குமனைக்கு(ம்) விலை
  18. யாக * கற்பித்த [பொ]ன் ௪௰ * இப்பொன் னாற்பதுக்கும் [இ]ன்னிலத்துக்கு[ம் கொ]ல்லைக்குமனைக்கும் இதுவெ ப்1ரமா(மாண)ம் ஆவ-
  19. தாகவும் * இன்னிலத்துக்கு இவ்வெரி நீர் ப்1ராப்1தி1 ஆற்றுக்கால் ப்1ராப்1தி1 வாய்க்கால் ப்1ராப்1தி1 பெறக்கடவதாகவும் * இவை-
  20. யிற்றுக்கு ஆளமஞ்சி எரிக்குழி வெட்ட ஆற்றுக்கால் வெட்ட வாய்க்கால் கொண்டம் இவையிற்றுக்கு விழுக்காடு நி-
  21. ற்க கடவதாகவுமற்று அரிசி காணம் ஆள்அமஞ்[சி*] எற சொறு எடுத்தளவு விரு்த்துப்படி[கை] விலை காணம் மற்றும் எப்பெ-
  22. ற்பட்ட உபாதிகளும் உட்படக்கட்டுக்குத்தொகையாக இன்னிலத்துக்கு கொல்லைக்கு மனைக்கும் ஆண்டு ஒ-
  23. ன்றுக்கு கடமைக்கு பொன் ௰ * இப்பொன் பத்தும் முன்று கந்தாயம் ஆகத்தரக்கடவராகவும் * இது ஒழிய
  24. [வெ]று ஒன்றுஞ்சொல்லக்கடவொம் அல்லவாகவும் * இன்னிலங்களுக்கும் கொல்லைக்கு மனைக்கு
  25. எப்பெற்பட்ட கலனும் இல்லை * கலநுள[வா]ய்த்தொற்றுப்படில் நாங்களெ திர்த்து தரக்கடவொம் ஆகவும் * நாங்.. ஒடிப்பொ-
  26. [வொ]ம் ஆகில் இப்பொன் னாற்பதும் தரக்கடஒம் ஆகவும் * இன்னிலங்களுக்கும் கொல்லைக்குமனைக்கும் தே1வதானம்
  27. தி[ருவு]டையாட்டம் ஒழிய மற்றும் வெண்டும் [பெ]ற்கு விற்றும்மொற்றி வைத்தும் கொள்ளக்கடவராகவும் * இப்படி ஸம்வதி3[த்து] நிலைவிலை ப்1ரமாணம்
  28. பண்ணிக்குடுத்தொம் ஸ்ரீவிஷ்ணுக1ம்புளிநாயக்கற்கு மஹாஜநம் இந்த மஹாஜநம் அநுக்3ரஹிக்க இந்த நிலவிலை ப்1ரமாணம் எழுதினேன் சம்புகுலப்பெரு-
  29. மாள் அகரத்து அங்கா1ரை ஸ்ரீத4ரப4ட்டனேன் இது எழுத்து * குமாண்டூர் அருளாளப்பெருமாள் எழுத்து * கந்தாடை பெரியாண்டான் பட்டர் எழுத்து *
  30. -33. (கையொப்பங்களைக் கொண்ட கடைசி நான்கு வரிகள் சிதைந்திருப்பதால் அவை படியெடுக்கப்படவில்லை. பல்வேறு கையொப்பங்களின் தொடக்கத்தில் காணப்படும் ஊர்களின் பெயர்கள் மட்டுமே வாசிக்கக்கூடியதாக உள்ளன:— குமாண்டூர், முருகப்பாடி, பெரிய-காட்டேரி, வங்கிப்புரம்.)

-- 0 --


8. எண்: 73 of SI vol I

அரசர், காலம்: ?

இடம்: சித்திரக் குகைக்குக் கீழே உள்ள சிறிய சன்னதி கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:

கடைக்கொட்டூர் என்ற ஊரைச் சேர்ந்தவரும் திருமலையை செர்ந்த  பரவாதிமல்லரின் மாணாக்கரும் ஆன அரிஷ்டநேமி ஆசார்யர் 
யக்ஷித்திருமேனி செய்வித்தார்.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடைக்கொட்-
  2. டூர்த் திருமலைப் பரவாதிம-
  3. ல்லர் மாணாக்கர் அரிஷ்டநே-
  4. மி ஆசார்யர் செய்வித்த
  5. யக்ஷித்திருமேனி

-- 0 --

9. எண்: 74 of SI vol I

அரசர், காலம்: மூன்றாம் ராஜராஜ சோழனின் 20-வது ஆட்சியாண்டு, பொ.ஆ.1236

இடம்: சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் இடதுபுறச் சுவர்.

கல்வெட்டுச் ச்செய்தி:

இராஜகம்பீரச் சம்புவராயன் என அழைக்கப்படும் அத்திமல்லன் சம்புகுலப் பெருமாள், ஜயங்கொண்ட சோழ மண்டலத்தின் ஒரு பிரிவான தமனூர் நாட்டிலுள்ள வீரன்பாக்கத்தைச் சேர்ந்த இலாலப் பெருமானின் மகனான ஆண்டான்கள் பங்களராயருக்கு, பலகுன்றக் கோட்டத்தின் ஒரு பிரிவான பங்கள நாட்டின் நடுவில் அமைந்துள்ள ..... என்ற இராஜகம்பீர நல்லூர் (கிராமத்தை), நிலத்திற்குக் கீழுள்ள கிணறுகள், நிலத்திற்கு மேலுள்ள மரங்கள் மற்றும் நான்கு திசைகளிலும் உள்ள எல்லைகள் ஆகியவற்றுடன், அதனை விற்கவும், அடமானம் வைக்கவும் அல்லது பரிமாற்றிக்கொள்ளவும் உள்ள உரிமையோடு அவரது சொத்தாக வழங்கினார்.

கல்வெட்டு:
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ த்1ரிபு4வனச்1ச1க்1ரவர்த்1தி1கள் ஸ்ரீராஜராஜதேவ-
  2. ற்கு யாண்டு இருபதாவது முதல் செயங்கொண்ட
  3. சொழமண்டலத்துத் தமனூர்நாட்டு [வி]ரன்பாக்க-
  4. த்து இலா[லப்]பெருமான் மகன் ஆண்பான்கள்* ப-
  5. [ங்]களராயர்க்குப் பலகுன்றக்கொட்டத்துப் பங்-
  6. களநாட்டு நடு[வில்] ........... குன்றத்தூரான ராஜக3ம்-
  7. பீரநல்லூர் [இவ]ர்க்குக் காணியாக கீழ்-
  8. நொக்கின கிணறு[ம் மெ]னொக்கின மரமும்
  9. நாற்பாலெலையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்-
  10. துக்கு உரித்தாவதாக குடுத்தொம் அத்திமல்ல-
  11. ன் சம்புகுலப்பெருமாளான ராஜக3ம்பீ4ரச்ச[ம்]-
  12. புவராயனென்
* ஆண்டான்கள் என்று படிக்கவும். 

-- 0 --


10. எண்: 75 of SI vol I

அரசர், காலம்: அதிகமான் விடுகாதழகிய பெருமாள் (பொ.யு. 12-13 நூ)

இடம்: சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் 
 வெளிப்புறச் சுவர்.

கல்வெட்டுச் செய்தி:

இந்தக் கல்வெட்டில் இரு தமிழ் உரைநடைப் பகுதிகளும் இடையில் ஒரு  சமஸ்கிருதச் செய்யுளும் உள்ளன. சேர வம்சத்தைச் சேர்ந்த வியாமுக்த-சிரவணோஜ்வல என்னும் விடுகாதழகிய பெருமாள் என்ற அதிகைமான் அளித்த சில கொடைகளைப் பதிவு செய்கிறது. இவர் தலைநகரம் தகடா (தகடூர்). இவர் ராஜராஜன் என்பவரின் மகனும், கேரள மன்னனான யவனிகா (Yavanikā) (தமிழில், வஞ்சி மன்னனான எழினி) என்பவரின் வழித்தோன்றலும் ஆவார். இம்மன்னர், முன்னர் யவனிகாவால் செய்விக்கப்பட்ட ஒரு யட்சன் மற்றும் ஒரு யட்சி ஆகியோரின் திருமேனிகளைப் பழுதுபார்த்து, அவற்றைத் திருமலையில் நிறுவினார்; ஒரு சேகண்டியை வழங்கினார்; மேலும் ஒரு கால்வாயையும் வெட்டுவித்தார். இக்கல்வெட்டில் திருமலை குன்றானது அருகசுகிரி (Arhasugiri - அருகனின் சிறந்த மலை) என்றும்,  எண்குண இறை திருமலை (எண்குணத்தோன் ஆகிய அருகனின் புனித மலை) என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் சமஸ்கிருதப் பகுதியின்படி, இது துண்டீர-மண்டலத்தைச் (Tuṇḍīra-maṇḍala) சேர்ந்ததாகும்; இது  தொண்டை-மண்டலத்தின் சமஸ்கிருத வடிவமாகத் தெரிகிறது.
கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ சேரவத்3சத்து அதிகைமா[னி] எழினி செய்த த4ர்மம்
  2. யக்ஷரையும் யக்ஷியாரையும் எழுந்த[ரு*]ளுவித்து எறிமணியும் [இ]-
  3. ட்டுக் கடப்பெரிக்[காலு]ங்கண்டு குடுத்தான் //  ஸ்ரீமத்1கே1ரளபூ4ப்4ரு
  4. தா1 யவநிகா1நாம்நா ஸுத4ர்ம்மாத்1மநா து1ண்டீ3ராஹ்வயமண்ட3லார்ஹஸு
  5. கி3ரௌ யக்ஷேச்5வரௌ க1ல்பி1தௌ1 பச்5சாத்1த1த்1கா1லபூ4ஷணாதி4க1
  6. ந்ருப1ஸ்ரீராஜராஜாத்மஜவ்யாமுக்1த1 ச்5ருவணோஜ்வலேந த1[க1டாநா]தே2ந ஜீர்ணோ
  7. த்3த்4ருதௌ1 // வஞ்சியர் குலப[தியெ]ழினி வ[கு]த்த வியக்கரியக்[கி]யரொ-
  8. டெ[ஞ்]சியவ[ழி]வு திருத்தி[யி]வெண்குணவிறை திருமலை வைத்[தா]ன் [அ]-
  9. ஞ்சித[ன்] வழி வரும் வன் வ[ழி] முதலி கலி அ[தி]கனவகன்.. நூல் விஞ்சையர்
  10. [ஸ்த2]ல புனை தகமையர் காவலன் விடுகாதழகியப்பெருமாளெய்
-- 0 --

குறிப்பு:

விடுகாதழகிய பெருமாள் அதியர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன். இவன் 12 ஆம் நூ பிற்பகுதியிலும், 13 ஆம் நூ தொடக்கத்திலும் தகடூர் நாட்டைச் சோழப் பேரரசுக்கு அடங்கி சுமார் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தவன். இராசராச அதியமானின் மகன். மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி சித்தூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இவன் சமணம், சைவம் இரண்டுக்கும் கொடைகள் அளித்துள்ளான். விடுகாதழகிய பெருமாளே அதியர் வம்சத்தின் கடைசி மன்னன்.  அவனுக்குப் பின்  தகடூர்ப் பகுதி போசளர் வசமானது. 8 அம் நூ க்கு பிறகு இவனும் இவன் தந்தை ஆகிய இருவர் மட்டுமே அதியமான்களின் வம்ச மன்னர்களாக கல்வெட்டுகள் மூலம் வரலாற்றில் கிடைக்கின்றனர்.

-- 0 --


11. எண்: 76 of SI vol I

அரசர், காலம்: அதிகமான் விடுகாதழகிய பெருமாள்

இடம்: சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் உட்புறம் வலதுபுறம்

கல்வெட்டுச் செய்தி:

இது மேற்கண்ட 75 ஆம் எண் கல்வெட்டின் சமஸ்கிருத சுலோகத்தின் நகல்

கல்வெட்டு:
  1. ஸ்ரீமத்1கே1ரள
  2. பூ4ப்4ருதா1 யவநி
  3. கா1நாம்நா ஸுத4
  4. ர்ம்மாத்1மநா து1ண்டீ3
  5. ராஹ்வயமண்ட3லா
  6. ர்ஹஸு கி3ரௌ ய
  7. க்ஷேச்5வரௌ
  8. க1ல்பி1தௌ1 பச்5சா
  9. த்1த1த்1கா1லபூ4
  10. ஷணாதி4க1 ந்ருப1
  11. ஸ்ரீராஜராஜா
  12. த்மஜவ்யாமுக்1த1 ச்5ரு
  13. வணோஜ்வலே
  14. ந த1[க1டாநா]தே2
  15. ந ஜீர்ணோத்3த்4ருதௌ1
-- 0 --


12 எண்: 77 of SI vol I

அரசர், காலம்: ?

இடம்: சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் உட்புறம் இடதுபுறம்

கல்வெட்டு
  1. ஸ்வஸ்தி1 ஸ்ரீ *
  2. அம்[பரு]டை-
  3. யான் ஆயன்
  4. மகன் கரிய-
  5. பெருமாளா
  6. ன வை[ரா] தர-
  7. யன் திரும-
  8. லைக்கடப்-
  9. பெரிக்கு நீரெ[ர்]-
  10. க்க கலிங்கிட்
  11. டுக்கொடுத்தா-
  12. ன் த4ர்ம்மோயந்ந்ஜ
  13. யது1  ௨  ௨  
-- 0 --

13. எண்: 141 of SI vol I

அரசர்: முதலாம் இராஜராஜ சோழன்

காலம்: ?

இடம்: கோபுரத்தின் உட்புறத்தில் அடிப்பாகத்தில் உள்ளது.

கல்வெட்டுக் குறிப்பு:
சிதைந்த (துண்டு) கல்வெட்டாகும். இதன் இரண்டாவது வரியில் "சோழ அரசன்" என்னும் பொருள்படும் ‘சோழகொன்’ (Śōḻa-kōṉ) என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டு:
  1. ஸ்வஸ்தி [ஸ்ரீ] இராஜராஜதேவர்க்கு யா[ண்டு] . . . . . . .
  2. ச்செகாம . . . கண்ணன் சோழகொன் வைத் . . . . . . .
-- 0 --


14. எண்: 97 of SI vol III part 3 & 89 of SI vol 19 & SI vol 23  (A.R. No 66 of 1907

அரசர், காலம்: முதலாம் பராந்தக சோழன் (பொ.ஆ. 907 - 953); 

காலம்: 4 ஆம் ஆட்சியாண்டு ( பொ.ஆ. 911)

இடம்: சித்திரக் குகைக்கு இடது பக்கம் உள்ள பாறை

கல்வெட்டுச் செய்தி:

இரண்டு வீரர்கள் பலகுன்றக் கோட்டத்தின் உட்பிரிவான பங்கள நாட்டில் அமைந்திருந்த வைகாவூர் மலையிலுள்ள சமணக் கோயிலில் ஒரு அடியாருக்கு உணவளிப்பதற்காக நான்கு கழஞ்சு பொன் வழங்கியதை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது. தானம் அளித்த இருவரான வீரசேவகன் பிடாரன் பூத்துகன் மற்றும் வீரசமநாயகன் சந்தயன் ஆயிரவன் ஆகியோர் கர்நாடக தேசத்திலிருந்து சோழர் படையில் சேர்க்கப்பட்டவர்கள். படைப்பிரிவுகளான இருமடிசோழக் கன்னாடகக் கடுத்தலை மற்றும் மதுராந்தகக் கருநாடகக் கடுத்தலை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள். 

கல்வெட்டு:
  1. [ஸ்வஸ்தி1 ஸ்ரீ]  [கொப்]பரகெசரிபன்ம(ர்)க்கு யாண்டு நாலா-
  2. வது பலகுன்றக்கொட்டத்துப் பங்களனாட்டு வை-
  3. ய்காவூர்த் திருமலைப்பள்ளியில் நிசதமொரு அடிகளமார்க்கு-
  4. ச் சொரு வைத்தார்¹ இருமடிச்சொழக் கன்னாடக கடுத்தலைவிற
  5. செவகன் பிடாரன் பூத்துகனும் மதுராந்தகக் கருநாடகக்
  6. கடுத்தலை விற்ச்சமநாயகன் சந்தய னாயிரவனு மிவ்வி-
  7. ருவொஞ் சந்திராதித்த ருள்ளளவும் நிற்க வைத்தொ மித-
  8. னுக்கு நாற்க்கழஞ்சு பொன்னால் வந்த பலிசைய்யாலிப்ப-
  9. ள்ளியாள்வாரை ஊட்டுவிக்க வைத்தொம் [||*]
-- 0 --

15. எண்: SI vol 23  (A.R. No 65 of 1907)

அரசர், காலம்: ராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னர தேவன். ஆட்சியாண்டு 19 (பொ.ஆ. 958-59)

இடம்: சித்திரக் குகைக்கு இடது பக்கம் உள்ள ஒரு பாறை

கல்வெட்டுச் செய்தி:

கன்னரதேவ பிருதிவிகங்கரையரின் பட்டத்தரசியான கங்கமாதேவியாரின் பணியாளரின் மனைவியான பெற்றாள் நங்கையார் என்பவர், வைகாவூரில் உள்ள திருமலையில் எழுந்தருளியுள்ள யக்ஷ-படாரர் (திருமேனி) முன் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காகச் செய்த ஏற்பாடுகளை இது பதிவு செய்கிறது. இவர் வேலூர் அருகே உள்ள சோழபுரத்திலிருந்து கிடைத்த கி.பி. 953 நாளிட்ட கல்வெட்டில் (No 346 of 1901) , எந்தவொரு மேலாதிக்க மன்னரையும் குறிப்பிடாமல் ஒரு சுதந்திரச் சிற்றரசராகக் குறிப்பிடப்படும் ஹஸ்திமல்லர் ஆவார்.

கல்வெட்டு:

ஸ்வஸ்வதி1ஸ்ரீ கச்சியுந் தஞ்சையுங்கொண்ட ஸ்ரீகன்-
னர தெவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது
கன்னரதெவ ப்1ருதி[வி*] கங்கரயர் தெவியார் கங்கமாதெவி-
யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண-
வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை-
காவூர்த் திருமலை யக்ஷப4டாரர்க்-
குத் துஞ்சாவிளக்கொன்று சந்தி-
ராதித்த ருள்ளவளவும் வைத்தார்[*]

-- 0 --


16. எண்: SI vol 23  (A.R. No 67 of 1907)

அரசர்:  விஜயநகர மன்னர் பிரதாப இம்மடிதேவ-மகாராயர் என்னும் மல்லிகார்ஜுன ராயர். 

காலம்; சக ஆண்டு 1373 (பொ.ஆ. 1452)

இடம்: சிகாமணிநாதர் கோயிலின் முன் உள்ள ஒரு தூண்.

கல்வெட்டுச் செய்தி:

ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து முருகமங்கலப்பற்றின் பிரிவான மண்டைகுள நாட்டுத் திருமலையில் உள்ள (சமணக்) கோயிலில் எழுந்தருளியுள்ள வல்லபப் பெருமாள்(?) தெய்வத்திற்குத் தனது மேலாதிக்க மன்னரின் புண்ணியத்திற்காகப் பூசை மற்றும் நைவேத்தியச் செலவுகளுக்காக மன்னரின் தண்டநாயகர் ஒருவர் (பெயர் தெளிவாக இல்லை) 19 பொன்னும் 3 பணமும் கொடையாக வழங்கியதை இது பதிவு செய்கிறது.
  1. சு5ப4மஸ்து1
  2. ஸ்வஸ்வதி1ஸ்ரீ [*] ஸ்ரீமன்ம-
  3. ஹாமண்டலெ -
  4. [சு]ரன் ஹரிய-
  5. [ரா]ய விபாடன்
  6. பாஷைக்கு
  7. தப்புவராயர்கண்-
  8. டன் முவராயர்க-
  9. ண்டன் கண்ட ந-
  10. ாடு[கொண்டு*] கொண்ட ந-
  11. ாடு கொடாதா-
  12. ன் இந்துராயசு-
  13. ரத்தான இராசா-
  14. திராசன் இராசப-
  15. ரமெசுரன் பூறு-
  16. வ த3க்ஷிணபச்-
  17. சிம உத்தர சமு-
  18. த்திராதிபதி ஸ்ரீ-
  19. விர கெட(ஜ)வெட்-ை
  20. ட கண்டருளிய பிற -
  21. தாப இம்மடிதெவ
  22. ராய மஹாராயர் ப்1ரு-
  23. தி[வி*] இராச்சியம் பண்ணி-
  24. அருளாநின்ற சகாத்-
  25. தம் ௲௩௱௭௰௩ -ந்
  26. மெல் செல்லாநி-
  27. ன்ற ப்1ரசா5பதி ௵-
  28. த்து மினநாயற்று
  29. அமரபக்ஷத்து
  30. நவமியும் வியா-
  31. ழக்கி[ழமை]யு[ம்]
  32. பெற்ற திருவொ -
  33. ணத்துநாள் ஜ-
  34. யங்கொண்ட-
  35. சொழமண்டல-
  36. த்துப் பல்குன்றக்-
  37. கொட்டத்து மு-
  38. ருகமங்கலப்பற்-
  39. று மண்டைகுள-
  40. [நா]ட்டு திருமலை -
  41. ...
  42. ......
  43. வல்லவப் பெ[ரு]-
  44. மாள்........
  45. ... தான் சண-
  46. ப்பண(சண்டப?)தெண்ணா[ய]
  47. க்க உடை[ய]ார் த-
  48. ர்ம்ம[ம்] காத்துக்கு-
  49. டுத்த தன்மசாத-
  50. னப்பட்டைய-
  51. ம் இன்னா[யனா*]ர்க்கு
  52. அங்கரங்க[வை]
  53. பொகம் அமுது
  54. படிநைவெ-
  55. த்தியத்துக்கும்
  56. இ[ ] தெவராய-
  57. மஹாராயற்கு த-
  58. ர்ம்மமாகக் கு...
  59. ...
  60. தானத்து...
  61. க்கு .........
  62. மங்கலப் ப-
  63. ற்றில் திருமலை ஜ-
  64. யின[ஸ்த2 ]ானத்
  65. [து] சொடிகுல-
  66. வழியும் வ...
  67. உபாதியும்
  68. உட்பட பொ-
  69. ன் ௰௯ ம்  ப ௩
  70. இப்பொன் ப-
  71. த்தொன்பது
  72. பொன்னும்
  73. மூன்று பண-
  74. மும் இவ்வரு-
  75. ஷம் காத்தி[ைக]
  76. சுத்த ஆராப்பி-
  77. ய முதலாக ஸ-
  78. ர்வமானியமா-
  79. க சந்திறாதித்
  80. தவற் ......
  81. ர்வ மானியமாகக் கு-
  82. டுத்த அளவுக்கு...
  83. சைய்ன [ஸ்தா2நம்]...
  84. ...ம் திருந-
  85. ாள் திருப்பணிகா-
  86. றவற்கு...கவும்
  87. இந்த தன்மத்து-
  88. .க்கு.....அகிதம்
  89. பண்ணிந
  90. வர்கள் கெங்-
  91. கைக் கரையி-
  92. ல் கார[ா*]ம்பசு-
  93. வைக் கொ-
  94. ன்ற பாவத்தி-
  95. ல் பொகக்க-
  96. டவராக[வும்] [*]
-- 0 --


17. எண்: SI vol 23  (A.R. No 68 of 1907)

அரசர்: ? முதலாம் ராஜேந்திர சோழன்

காலம்; 23-ஆவது ஆட்சியாண்டு (பொ.ஆ.1035)

இடம்: சிகாமணிநாதர் கோயில் — முற்றத்தில் கிடக்கும் ஒன்பது தனிக் கற்கள்

கல்வெட்டுக் குறிப்பு

இவை பெயர் அழிந்துபோன ஒரு மன்னனின் 23-ஆவது ஆட்சியாண்டு மற்றும் 175-ஆவது நாளில் பொறிக்கப்பட்ட ஒரே கல்வெட்டின் தொடர்பற்ற துண்டுப் பகுதிகளாக இருக்கலாம். ஒரு மொத்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு, திருமலையில் உள்ள சமணக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு வரிவிலக்கு அளித்ததே இக்கல்வெட்டின் நோக்கமாகத் தெரிகிறது. வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளாக இருக்கக்கூடிய பல நபர்களின் பெயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் இருவரின் பட்டப்பெயர்களான பிரம்மாராயர் ஜனநாதனார் என்கிற இராஜேந்திரசோழ பிரம்ம[ராயன்] மற்றும் இராஜேந்திரசோழ-மாவலி-வா[ணாதராயன்?] ஆகியவை, இம்மன்னர் முதலாம் இராஜேந்திர சோழனாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

கல்வெட்டு

துண்டு 1 & 2
  1. குடுப்பதாகவும் ஆக இவ்வூர்க்கெ யாண்டு இருபத்திரண்டாவது முதல் வெவ் வெ[று]-அமுது.........வைக[ாவூர்] திருமலைமெல்
  2. தூருடையார் பொற்காடன் மதுராந்த1கநாரும் க்ஷத்1ரியசிகாமணிவளநாட்டு மருகல்நாட்டுச் சொழகெரள ந....... தெவனாச்சபிடாரநாருங் களத்தூருடையார் தும்
  3. த்தமுர் அபண்டம்பாக்கிழான் அடிகள் காளியுமிருந்து யாண்டு ௨௰௩ ஆவது நாள் நூற்றெழுபத்தைஞ்சினால் வரியிலிட்டது இவை புரவுவரி திணை
துண்டு 3
  1. ண... கலமுடையா[ன்] நாற்பதின் கழஞ்சு...க்க...
  2. நார்க்கு [ப்3ரு]ஹ்மாராயன் ஜநநாதனாரான ராஜேந்த்3ரரசொழப்3ரஹ்ம
  3. முர்கிழான் புத்த நாழியும் வரிப்பொத்தகநாயகம் உ[ய*]யக் கொ
துண்டு 4
  1. நாற்கழஞ்செ முன்று மஞ்சாடியு[ம்] நான்மாவும்......
  2. ப்பெறூர் நாட்டுப் பெறூர் நெற்குன்ற[ங்கிழா]......
  3. த்ரியசிகாமணிவளநாட்டு திருநறையூர்நாட்டு மதுராந்தக நல்லூர்கிழ்
துண்டு 5
  1. ஜந்த்ரசொழமாவலி........வனும்
  2. னாத வளநாட்டு காந்தாரநாட்டு க்கொனூரு ...... கால்
துண்டு 6
  1. னாத.
  2. பாண்டிகுலாசனிவளநாட்.........
துண்டு 7
  1. ...மஞ்சாடியும் நாலுமாவும்
  2. ...வளநாட்டு ராஜெந்த்ரசொழ
துண்டு 8
  1. ............லத்தக்கெரி
  2. நன்பகலான [கு]றிமங்கல
துண்டு 9

யூ[ர்] கொட்டத்துப் பாகூர்நாட்டு உக்கலுடையான் பன்று காடன் சூற்றியும் ஊற்று[காட்டு]கொட்டத்து நிர்வெளூர்நாட்டு சொ[ழதி]வாகரநல்லூர்த் தா

-- 0 --


18. எண்: SI vol 23  (A.R. No 69 of 1907)

அரசர்: இரண்டாம் தேவராயர்

காலம்: சக ஆண்டு 1367 மற்றும் கி.பி. 1445-க்கு இணையான குரோதன வருடம் (கார்த்திகை 6)

இடம்: ஏரியில் உள்ள ஒரு பாறை

கல்வெட்டுக் குறிப்பு

இரண்டாம் தேவராயரின் காரியக்கர்த்தாவான திப்பரைச நாயக்கர், தானத்தார், மகேஸ்வரர்கள் மற்றும் படைவீடு ஊரார் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவை இது பதிவு செய்கிறது. இதன்படி, திருமலையின் திருநாமத்துக்காணியில் உள்ள குறிப்பிட்ட நான்கு ஏரிகளில் மீன்பிடி குத்தகை (ஏரிப்பாசி?) மூலம் கிடைக்கும் வருமானப் பணத்தை அந்த ஏரிகளை ஆண்டுதோறும் (தூர்வாரி) ஆழப்படுத்துவதற்காகவும், பள்ளிச்சந்தத்திலிருந்து கிடைக்கும் வாசல்குழிப்பணம்(?) தொகையை மற்றொரு ஏரியை ஆழப்படுத்துவதற்காகவும் ஒதுக்கியதை இது குறிப்பிடுகிறது.

கல்வெட்டு
  1. ஸ்வஸ்வதி1ஸ்ரீ [*]ஸ்ரீமன்மகாமண்டலெசுரன் கெசவெட்டை க-
  2. ண்டருளி[ய] விரபிறதாப தெவராய மக[ா*] ராயர் சகாற்த்து
  3. ............கையில் காரியத்துக்கு கடவ திப்பரை[ச நாய]க்கரும்
  4. தானத்தார் மாயெசுரரும் கல்வெட்டிக்குடுத்த
  5. சு5ப4மஸ்து1 உ குறொதனவருஷம் காத்திகைய் ௬ தி[யில்]
  6. படைவிடு உடையாரொம் னா ...வநயினார்[ர்] திருநாமத்துக்காணி
  7. திருமலையில் பெ[றக்கடவ] பொன் அணி[க]லத்[து]ஆல் எந்தல்
  8. கல் எந்தல் நந்திப்பரையன் எந்தல் சிலதொங்கன் இந்த எரிகளில்
  9. எரிப்பாசியில் விலையில் பணம் உள்ளது வருஷ வருஷதொறும்
  10. இந்த எரிகளிலெ குழிவெட்டக்கடவது ஆகவும் வாசல் குழிப்பணம்
  11. உள்ளது பள்ளிச்சந்தம் வாசல் குழிப்பணம் உய எரியிலெ குழிவெ[ட்டக்]-
  12. கடவது ஆகவும் இந்த தன்மத்துக்கு அகுதம் பண்ணின -
  13. வர்கள் கங்கைகரையில் காராம்பசுவைக் கொன்ற
  14. பாவத்திலெ பொகக்கடவர்களாகவும் இவை திப்பரை[ச*] நாயக்கர் எழுத்து
  15. இவை சூரியபட்டர் ஆழ்வார் எழுத்து இவை வணி..
  16. [ழுமலை ந]ாயன் எழுத்து பொன்-
  17. னம்பல ராசாழ்வி எழுத்து[*]
-- 0 --


19. எண்: 327 

அரசர்: ?

காலம்: சக ஆண்டு 803 (பொ.ஆ. கி.பி. 881)

இடம்: சமணக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடைந்த கற்பலகைகளில்.

கல்வெட்டுக் குறிப்பு:

சிதைந்துள்ளது. பங்களநாட்டில் அமைந்துள்ள வைகாவூர்-திருமலையில் உள்ள சமணக் கோயிலுக்குப் பொன் தானமாக வழங்கப்பட்டதை இது குறிப்பதாகத் தெரிகிறது. கோயிலின் பட்டாரர்கள் (பட்டாரகர்கள்) இக்கொடையைப் பாதுகாப்பதாக ஒப்புக்கொண்டனர்.

ஆதாரம்: ஆர். பூங்குன்றன், "திருமலையிலிருந்து புதிய கல்வெட்டுகள்", கல்வெட்டு, 1975, எண் 6, பக். 32.

-- 0 --


20. எண்: 328

அரசர்: சோழர்

காலம்: 9-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி

இடம்: ஓவியக் குகைக்கு இடதுபுறம் உள்ள பாறையின் ஓரத்தில்.

கல்வெட்டுக் குறிப்பு:

சிதைந்துள்ளது. நிகுந்தமாச்சடையன் (நிர்கந்தமாசடையன்) என்பவர் தன் தந்தை விக்கடி அரையரின் புண்ணியத்திற்காகக் கோயிலுக்கு அளித்த ஏதோ ஒரு கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், நிர்கந்தமாச்சடையனின் மகள் லாடமகாதேவி என்றும், அவருடைய கணவர் மும்முடிச்சோழன் என்றும் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஆர். பூங்குன்றன், "திருமலையிலிருந்து புதிய கல்வெட்டுகள்", கல்வெட்டு, 1975, எண் 6, பக். 31-32.

-- 0 --



21. எண்: 330

அரசர்: இராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)

காலம்: 14-வது ஆட்சியாண்டு (பொ.ஆ. 953)

இடம்: ஓவியக் குகைக்கு இடதுபுறம் உள்ள பாறையின் ஓரத்தில்.

கல்வெட்டுக் குறிப்பு:

சிதைந்துள்ளது. அரசர் கன்னரதேவனின் பெயர் மற்றும் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டவுடன் இக்கல்வெட்டு நின்றுவிடுகிறது.

ஆதாரம்: ஆர். பூங்குன்றன், "திருமலையிலிருந்து புதிய கல்வெட்டுகள்", கல்வெட்டு, 1975, எண் 6, பக். 30-31.

-- 0 --


22. எண்: 331

அரசர்: மதிரைகொண்ட கோ-இராஜகேசரி (சுந்தர சோழன் இரண்டாம் பராந்தகன்)

காலம்: 6-வது ஆட்சியாண்டு (கி.பி. 961-62)

இடம்: சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில்.

கல்வெட்டுக் குறிப்பு:

இது மிலாடு தலைவரான நட்டடிகள்-சித்தவடவன் மற்றும் நாடாள்வார்-இளங்கோனடிகளின் மகளான அவரது மனைவி ஏகவீரன்-தன்மசங்கதியார் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்தத் தலைவர் சுக்ர வம்சத்தைச் சேர்ந்த நட்டன் சித்தவடவன் என்கிற நரசிம்மன் என்கிற சக்திநாதன் என்பவருடன் அடையாளம் காணப்படலாம். 

ஆதாரம்: எல்.கே. சீனிவாசன், "திருமலையிலிருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள்", இந்தியக் கல்வெட்டியல் கழகத்தின் நான்காவது ஆண்டு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை (ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம்), சென்னை, 1978.

-- 0 --


23. எண்: 332

அரசர்: முதலாம் இராஜராஜன்

காலம்: பொ.ஆ. 985-101

இடம்: சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில்.

கல்வெட்டுக் குறிப்பு:

இது நத்ததேவரின் சீடரான கனகநந்தியரையர் என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 'வைகைமலை' என்ற இடம், தற்போது திருமலை என்று அழைக்கப்படும் வைகாவூருடன் ஒத்துப்போகிறது.

ஆதாரம்: எல்.கே. சீனிவாசன், முன் குறிப்பிட்ட நூல் (op. cit.), 1978.

-- 0 --


24. எண்: 339

அரசர்: இரண்டாம் இராஜேந்திர சோழதேவர்

காலம்: 10-வது ஆட்சியாண்டு (பொ.ஆ. 1062)

இடம்: சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில்.

கல்வெட்டுக் குறிப்பு:

'சித்திரமேழி-பெரியநாட்டார்' என்ற வேளாண் வணிகக் குழுவினர் செய்துகொண்ட உடன்படிக்கையை இது பதிவு செய்கிறது. அதன்படி, ஒரு வேலி நிலத்திற்கு 'அருள்மொழிதேவன் மரக்கால்' அளவையின்படி குறிப்பிட்ட அளவு நெல்லைப் பிசானம் (பசானம்) சாகுபடியிலிருந்து 'கடமை' (வரி) ஆகக் கொடையாளிக்கு (பெயர் சிதைந்துள்ளது) வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், அவ்வூரில் உள்ள தேவதானம் மற்றும் பள்ளிச்சந்தம் நிலங்கள் பழைய உடன்படிக்கையின்படியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: எல்.கே. சீனிவாசன், முன் குறிப்பிட்ட நூல் (op. cit.), சென்னை, 1978.

-- 0--


25. எண்: 

அரசர்: இல்லை

காலம்: 18 - 19 நூற்றாண்டு எழுத்தமைதி

இடம்: மலை உச்சியில் பார்சுவநாதர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள திறந்த பாறை

கல்வெட்டுக் குறிப்பு:

இது திருமலை கோயில்களின் அறங்காவலர்களாக தகடமகாராஜா, குந்தவை, சாமுண்டையா, குழந்தை உபாத்தியார் மற்றும் அவரது மகன் பூபால உபாத்யார் ஆகியோரைக் குறிப்பிடுகிறது. குந்தவை முதலாம் ராஜராஜ சோழனின் சகோதரி. குந்தவை ஜினாலயம் என்னும் நேமிநாதர் கோயிலைக் கட்டியவர். தகடமகாராஜா என்பவன் மூன்றாம் ராஜராஜனின் சிற்றரசரான  தகடூரை ஆண்ட அதியமான் விடுகாதழகிய பெருமாள்.இவர் குகைச் சிற்பங்களைப் புதுப்பித்தவர். கி.பி. 1024-இல் நன்கொடை அளித்த 'சாமுண்டப்பை' என்ற பெண் கொடையாளியின் பெயரே தவறுதலாக சாமுண்டையா என்னும் ஆண் பெயராக மாற்றப்பட்டுள்ளது. பூபால உபாத்யார் தமது அறங்காவலர் பதவியை சட்டப்பூர்வமாக்கவும், உள்ளூர் சமண சமூகத்தின் ஆதரவைப் பெறவுமே  முற்காலக் கொடையாளர்களையும் அறங்காவலர்கள் பட்டியலில் இணைத்து இந்தக் கல்வெட்டைப் பொறித்துள்ளார்.

கல்வெட்டு:
  1. ஸ்ரீ சைலபுர மென்னும் 
  2. திருமலை தேவஸ்தா
  3. னங்களின் தர்மகர்த்தாக்களாயிருந்தவர்க
  4. களுடைய புனித நாமங்கள் 
  5. சோழதேச கேரள மஹாராஜா 
  6. .... பரம்பரை தகட மஹாராஜா 
  7. குந்தவையார் சாமுண்டய்யா 
  8. .... குழந்தை உபாத்தியார் 
  9. ...... குமாரர் பூபால உபாத்யர்
-- 0 --

26. எண்:

அரசர்: ?

காலம்: ?

இடம்:  மலை உச்சியில் பார்சுவநாதர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள திறந்த பாறைகள்

கல்வெட்டுக் குறிப்பு:

இவற்றில் மூன்று பாத இணைகள் காணப்படுகின்றன. அவற்றின் கீழ் அவற்றுக்கு உரிய ஆசார்யர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

பாத இணை 1:
  1. ஸ்ரீ ஸமந்த1ப3த்3ர
  2. க3ணத4ர
  3. ப4க3வாந்
பாத இணை 2:
  1. ஸ்ரீ வ்ருஷப4ஸேந
  2. க3ணத4ர ப4க3வாந்
பாத இணை 3:
  1. ஸ்ரீவரத்3த்தா
  2. சார்யர்
இது தவிர Sri Vadeepa Simhasuri என்பவரின் பாத இணைகளும் காணப்படுகின்றன.

-- 0 --


துணை:

South Indian Inscriptions Vol I; 1890 Inscription Nos 66 - 77, 141

South Indian Inscriptions Vol III  Inscription No 97

South Indian Inscriptions Vol XIX  Inscription No 89

South Indian Inscriptions Vol XXIII Inscriptions No 65 - 69

Jaina Inscriptions in Tamil Nadu; Ekambaranathan A, Sivaprakasam C K ; Inscriptions No 327, 328, 330 - 332, 339

L.K. Srinivasan, "Recently discovered inscriptions from Tirumalai", Paper presented to the Fourth Annual Congress of the Epigraphical Socicty of India, (Summaries of papers) Madras, 1978.

https://encyclopediaofjainism.com/recent-jaina-epi-graphical-discoveries-and-some-local-traditions/


கல்வெட்டுகள் உள்ள இடங்கள்

1 திருமலை அடிவார கோபுரத்திற்கு எதிரே புதைந்துள்ள பாறை 

13 கோபுரத்தின் உட்புறத்தில் அடிப்பாகத்தில் உள்ளது. 

3 கோபுரத்திற்கும் ஓவியங்கள் உள்ள குகைக்கும் இடையில் உள்ள படிகளின் கீழ் உள்ள பாறை 

4 திருமலை அடிவார மண்டபச் சுவரில் இடதுபுறம் 

5 திருமலை அடிவார மண்டபச் சுவரில் வலதுபுறம் உள்ள முதல் கல்வெட்டு 

6 திருமலை அடிவார மண்டபச் சுவரில் வலதுபுறம் உள்ள இரண்டாம் கல்வெட்டு 

7 திருமலை அடிவார மண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு

8 சித்திரக் குகைக்குக் கீழே உள்ள சிறிய சன்னதி கல்வெட்டு 

9 சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் இடதுபுறச் சுவர். 

10 சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின்  வெளிப்புறச் சுவர். 

11 சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் உட்புறம் வலதுபுறம் 

12 சித்திரக் குகைக்குச் செல்லும் நுழைவாயிலின் உட்புறம் இடதுபுறம் 

14 சித்திரக் குகைக்கு இடது பக்கம் உள்ள பாறை 

15 சித்திரக் குகைக்கு இடது பக்கம் உள்ள ஒரு பாறை

20 ஓவியக் குகைக்கு இடதுபுறம் உள்ள பாறையின் ஓரத்தில். 

21 ஓவியக் குகைக்கு இடதுபுறம் உள்ள பாறையின் ஓரத்தில்.

16 சிகாமணிநாதர் கோயிலின் முன் உள்ள ஒரு தூண். 

17  சிகாமணிநாதர் கோயில் — முற்றத்தில் கிடக்கும் ஒன்பது தனிக் கற்கள் 

19 சமணக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடைந்த கற்பலகைகளில்.

22 சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில். 

23 சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில்.

24 சந்திரபிரபா கோயிலின் பிரகாரத்திற்குள் உள்ள ஒரு பாறையில். 

2 திருமலை உச்சியில் உள்ள பாறை 

25, 26 மலை உச்சியில் பார்சுவநாதர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள திறந்த பாறைகள்

18 ஏரியில் உள்ள ஒரு பாறை



கருத்துகள்