இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செங்கம் நடுகற்கள்: அறிமுகம்

சமூகத்துகாகவோ, குடும்பத்துக்காகவோ, நீதி பிழைத்ததாலோ உயிர் விட்டவர்கள் நினைவாக வழிபடும் நோக்குடன் நிறுவப்பட்ட இறந்தவர்களின் சிற்பத்தை உடைய கற்கள் நடுகற்கள் எனப்படுகின்றன.  நடுகற்கள் இருவகை; சிற்பம் மட்டுமே உடையது. சிற்பமும் தொடர்புடைய கல்வெட்டும் உடையது. பெரும்பாலும் இரண்டாம் வகை நடுகற்களே தொல்லியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுள்ளன. இவ்வாறு ஆவணப்படுத்த நடுகற்கள் தமிழகத்தில் 320 ஆந்திர பிரதேசத்தில் 476 கர்நாடகத்தில் 7 உள்ளன* தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் 80% திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளன. இவை தென் பெண்ணையாறு, செய்யாறு. பாலாறு  நதிகளை ஒட்டிய பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களை அடுத்த கர்நாடக மாநிலத்தின் கோலார், மைசூர் மாவட்டங்களிலும் ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பை, ராயலசீமா மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதியிலும் நடுகற்கள் அதிகம் உள்ளன.  நடுகற்களில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளின் வளர்ச்சி, மொழிநடை ஆகியவற்றை அறியவும், சிற்பங்கள் வெவ்வேறு காலங்களில் வீரர்களின் உருவம், உடை, ஆயுதங்கள

கீழ் ராவந்தவாடி அம்மா குளம்

படம்
தமிழகத்தில் கலவிச் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் இரண்டு. அவை இரண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. ஒன்று சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளம். மற்றொன்று கீழ் ராவந்தவாடியில் உள்ள அம்மா குளம். கீழ் ராவந்தவாடியில் பல்லவர் கால நடுகற்களும் உள்ளன. சென்ற நாள்:12 ஜூலை, 2022 அமைவிடம் கீழ் ராவந்தவாடி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் உள்ளது. அம்மா குளம் அவ்வூரில் தானிப்பாடி சாலையில் இருந்து வடக்காக பிரிந்து செல்லும் சிறு சாலையில் சுமார் 0,5 கிமீ தூரத்தில் உள்ளது. கூகிள் வரைபடம்:  https://goo.gl/maps/fSWKP4iz6EE1 10 ஆண்டுகளுக்கு முன் இந்த குளம் இவ்வாறு பராமரிப்பின்றி இருந்தது. பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குளம் சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளத்தை விட சிறியது.  நாற்புறமும் படிக்கட்டுகள், நாற்புறமும் நுழை வாயில்கள், மதில் சுவர்களுடன் காணப்படுகிறது. குளத்தின் மூலைகளிலும் நுழைவாயில்களிலும் ரிஷபங்களின் சிற்பங்கள் உள்ளன.