இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணிகிலுப்பை

படம்
சிறப்பு  திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தர் சிலை  பயணம்  இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள்  -26/08/2019) செய்யாறிலிருந்து பயணத்தைத் தொடங்கினேன். சென்ற முதல் இடம் கனிகிலுப்பை. செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில்  செய்யாறை அடுத்து சில கிமீ மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லாமல் ஜல்லி சாலையாக இருந்தது. வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை அடைந்து சிறிது தூரத்தில் நரசமங்கலம் அருகில் வலது புறம் பிரியும் ஒற்றைச் சாலையில் பயணம் செய்து புத்தர் வீற்றிருக்கும் பிள்ளையார் கோயிலை அடைந்தேன். கணிகிலுப்பை விநாயகர் கோயில்  புத்தர் சிலை  ஆலயத்தின் முன் இறக்கப்பட்டுள்ள தாழ்வாரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.  கணிகிலுப்பை புத்தர்  மூன்று சிங்கங்களால் தாங்கப்படும் ஆசனத்தின் மீது அரைத் தாமரை இருக்கையில் (அர்த்த பத்மாசானம்) அமர்ந்திருக்கிறார் புத்தர். ஆசனத்தின் முதுகுப்புறம் இரு பக்கங்களிலும் மேலுமாக மூன்று சட்டங்களால் அணைக்கப்பட்டு நீள திண்டு ஒன்றை கொண்டுள்ளது. ஆசனத்தின் உயரம் அவரது நெ

திறக்கோயில்

படம்
சிறப்பு  பழமை - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள்  பாறையின் நாற்புறங்களிலும் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள்  இரு பழைய அருகர் ஆலயங்கள்  பயணம்  இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள்  -26/08/2019) திருவண்ணாமலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல ஒரு இடைமறிப்பு. 'திறக்கோயில்' வழிகாட்டிக் கல். சிறிது நேரம் கையில் இருக்கவே பார்த்துச் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமான வளைந்து நெளியும் நல்ல ஒற்றைச் சாலை. வழியில் ஒரு நீரில்லா ஓடைக் கரையில் மரத்தடியில் உட்கார்ந்து கைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் வழிகேட்க தயங்கி நின்றேன். அவருக்கும் திறக்கோயில்தான் போகவேண்டும். கூடவந்து வழி காட்டினார். வெட்டவெளியில் ஒரு பாறை. அதன் நான்கு பக்கங்களிலும் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள். திறக்கோயில் சமண பாறைச் சிற்பங்கள்  ரிஷபநாதர்  ஆதிநாதர் எனும் ரிஷபதேவர்  மூன்று சிங்கங்களால் தாங்கப்படும் சிம்மாசனத்தின் மீது அரைத் தாமரை இருக்கையில் (அர்த்த பத்மாசானம்) அமர்ந்திருக

அருகர் ஆலயங்கள் நான்கு - தாயனூர், மேல் மலையனூர், வளத்தி, எய்யில்

படம்
தமிழ் நாட்டில் உள்ள சமண மதத்தினர் இருவகை. தமிழ் நாட்டையே தாயகமாகக் கொண்ட தமிழ் சமணர்கள். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து வந்த சமணர்கள். தமிழ் சமணர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.  பெரும்பாலும் நாயனார், உடையார் என்ற பட்டப்  பெயர் கொண்டவர்கள். பரம்பரையாக கிராம வாழ்க்கை. அருகர் கோயில்களை மையமாகக் கொண்ட சில தெருக்கள்.  விவசாயமே முக்கியத் தொழில். மற்ற கிராம சமுதாயங்களைப் போன்றே கல்வி, வேலை, வியாபாரம் என்று விரிந்தாலும் இன்னும் பழைய கிராம வாழ்க்கை முறையும் தொடரத்தான் செய்கிறது.   விகாரி ஆண்டு ஆடி மாதம் ஆம் நாள் (15/092019) திருவண்ணாமலையில் இருந்து சீயமங்கலம் சென்றபோது வழியில் தாழனூர், மேல் மலையனூர், வளத்தி, எய்யில் என்ற நான்கு ஊர்களில் பார்த்த அருகர் கோயில்களைப் பார்த்தது பற்றியதுதான் இந்தப் பதிவு. திருவண்ணாமலை → அவலூர்பேட்டை (25 கிமீ) → தாயனூர் (9 கிமீ) → மேல்மலையனூர் (3.5 கிமீ) → வளத்தி (6 கிமீ)  வரை நேர்ப் பயணம். பின் எய்யில் செல்ல ஒரு வழிமாற்றம். பின் மீண்டும

ஆவூர் - 2 - அகத்தீசுவரர் கோயில்

படம்
சிறப்பு  ஆவூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழர் காலக் கோயில்கள் உள்ள மற்ற இடங்கள்: திருவண்ணாமலை தாமரைப்பாக்கம் திருமலை பழங்கோயில் செங்கம் திருவோத்தூர்  பிரம்மதேசம்  கூழமந்தல்  மடம்  பயணம்  விகாரி ஆண்டு ஆவணி மாதம் மூன்றாம் நாள் (20/08/2019) ஆவூர் குடைவரைக் கோயிலைக் காணச் சென்றேன். சோழர் கால அகத்தீசுவரர் திருக்கோயிலைப் பற்றி நான்  அறிந்திருக்கவில்லை. இந்த சிவாலயத்தைக் கண்டது ஒரு தற்செயல்தான். ஆவூரை அடைந்தபோது சாலையிலிருந்து ஒரு பழைய கோயில் தென்பட்டது. சாலையிலிருந்து  அதுதான் நான் தேடிவந்த குடைவரைக் கோயிலாக இருக்கும் என எண்ணி வழிகேட்டு அங்கு சென்றேன். அதுதான் இந்தக் கோயில். வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது. வாயில்  மூடிவைக்கப்பட்டிருந்த கேட்டோடு சிறிது நேரம் போராடித் திறந்து உள்ளே போனேன். சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோயில்.(*) மதிற் சுவரோரம் ஆங்காங்கே இடிந்த தூண்களும், இடிபாடுகளும் கிடந்தன. இடிபாடுகள்  கோயில் இந்த இடிபாடுகளில் இருந்து பாகங்களைப் பொறுக்கி எடுத்து கோயிலையும் பக்கத்தில்