இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நரசமங்கலம்-மாமண்டூர் குடைவரைகள்

படம்
முதலாம் சிறப்பு  நான்கு மகேந்திரர் பாணி குடைவரைக் கோயில்கள்.  தமிழகத்தில் ஒரே மலைத்தொடரில் நான்கு குடைவரைகள் அமைந்திருப்பது.  மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிகப் பெரிய குடைவரைகளுள் ஒன்று.  மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிக அதிகக் கருவறைகள் கொண்ட குடைவரை. மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் இரு பக்க முகப்பு கொண்ட ஒரே குடைவரை. பயணம்  இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள் (26/08/2019) கணிகிலுப்பையைப் பார்ததுவிட்டு மதியம் மாமண்டூர் வந்தேன்..  திருவண்ணாமலையில் இருந்து சுமார் 105 கிமீ தூரம். வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலும் உள்ளது நரசமங்கலம் என்ற ஊர். அங்கிருந்து சாலையிலிருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ளன குடைவரைகள். சாலை பிரியும் இடத்தில் பச்சையம்மன் கோயில் வளைவு ஒன்று உள்ளது. குடைவரைகள்    இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது. வளாகத்தின் வாயிலில் இருந்து

கூழமந்தல்

படம்
சிறப்பு  முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் அவன் கங்கை கொண்டதன் நினைவாக அவன் குரு எடுப்பித்தக் கோயில். முழுதும் கல்லால் ஆனது. பிற்கால கோயில்  கட்டுமானங்களால் சூழப்படாமல் சோழர் கலைக்கு உதாரணமாக உள்ளது. பயணம்  கூழமந்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து சேத்துப்பட்டு - வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் போகும் சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 22 கிமீ தூரத்தில் உள்ளது.  இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் முதல் நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 8 ஆம் நாள்  - 25/08/2019) நெடுங்குன்றம், மடம், தென்நாங்கூர் ஆகிய ஊர்களைக் கண்ட பிறகு மாலை  கூழமந்தலுக்கு   வந்தேன். பெயர் வரலாறு  * கல்வெட்டுகளின் படி இவ்வூர் 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து காளியூர் கோட்டத்துப் பாகூர் நாட்டில்' அமைந்திருந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் ' கங்கை கொண்ட சோழபுரம்'  எனவும் அவன் மகன் முதலாம் ராஜாதிராஜன் காலத்தில்  விக்கிரம சோழபுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள  பேசும் பெருமாள் கோயில். நிலைக்கால்களில் உள்