ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)
பெயர் ஜேஷ்டா என்றால் வடமொழியில் மூத்த என்று பொருள். (ஜேஷ்ட புத்திரன் = மூத்த மகன்). ஜேஷ்டா தேவி = மூத்த தேவி. சுருக்கமாக 'மூதேவி' - 'மூ' என்ற முன்னொட்டு மூத்த என்ற பொருள் படுகிறது (மூதாதையர்). ஜேஷ்டையின் தமிழ் வடிவம் 'சேட்டை'. சூடாமணி நிகண்டு ஜேஷ்டைக்கு 13 பெயர்களைக் குறிப்பிடுகிறது. மூதேவி-மூத்த தேவி தெளவை-மூத்தவள் முகடி சீர்கேடி-சீர்களைக் கெடுப்பவள் சிறப்பில்லாதாள் கேட்டை-கேட்டிற்குரியவள் கெடலணங்கு சேட்டை-மூத்தவள் ஏகவேணி-ஒற்றைச் சடையான கூந்தலை உடையவள் கலதி-கீழானவள் இந்திரைக்கு மூத்தாள்-திருமகளுக்கு மூத்தவள் காகத்துவசம் உற்றாள்-காக்கைக் கொடியுடையாள் கழுதை வாகினி இப்பெயர்களில் சங்க இலக்கியச் சொற்கள் எவையும் இல்லை. 1 - 7 பிற தமிழ்ச்சொற்கள். 8 - 10 வடசொற்கள், 11 - 13 மணிப்பிரவாளச் சொற்கள். கூடுதலாக கயாதரம் 'கரக்கொடிமங்கை' என்ற பெயரை குறிப்பிடுகிறது. தமிழிணையக் கல்விக் கழகத்தின் தமிழ் மின் நிகண்டு சேட்டைக்கு முகடி, தெளவை, கலதி, மூதேவி...
கருத்துகள்
கருத்துரையிடுக