இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதி திருவரங்கம் - தமிழகத்தின் மிகப் பெரிய பெருமாள்

படம்
சிறப்பு தமிழகத்தின் மிக நீளமான அரங்கன். அவருக்கு மூத்தவர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடையே நடை சாத்தப்படாமல் திறந்து இருக்கும் கோயில். பயணம்  விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (20-09-19) அன்று ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன். தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையிலிருந்து தெற்கே தென்பெண்ணையின் வடகரையில் மணலூர்பேட்டை  - சுமார் 26 கிமீ  தூரம்; திருக்கோவிலூரில் இருந்து சுமார்  15 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். மணலூர்பேட்டையில் இருந்து ஆற்றைப் பாலம் மீது கடந்து மேற்கே  பிரிந்து ஆற்றின் தென்கரையை ஒட்டிச் செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது ஆதிதிருவரங்கம். ஆற்றின் வடகரையில் உள்ள ஜம்பைக்குச் சென்ற பிறகு ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன். கோயில்  கோயில் இரு மதில் சுவர்கள் இரு கோபுரங்கள் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.  கோயில் வெளி மதில்  கோயில் வெளி கோபுரம் - கிழக்கு நோக்கியது அடுத்த நாள் புரட்டாசி முதல் சனிக்கிழமை. பெரும் பக்தர் கூட்டத்தை முறைப்படுத்த, அன்னதானம் செய்ய ஏ

ஜம்பை - பகுதி 3 - காசி விசுவநாதர் கோயில்

படம்
பயண விவரங்களை  ஜம்பை - பகுதி 1 - ஜம்பை மலை  இடுகையில் காணவும். காசி விசுவநாதர் கோயில் ஊரின் வெளியே சாலை ஓரத்தில் உள்ள கோயில். இடிபாடுகளாய் இருந்த பழமையான கோயில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது.  காசி விசுவநாதர் கோயில், ஜம்பை  காசி விசுவநாதர் கோயில், ஜம்பை காசி விசுவநாதர் கோயில் ஜம்பை கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம்  முன்மண்டபத்தின் தாங்குதளம்  கோயில் பக்கத்தில் ஒரு தனிச் சிற்பம்  கோயில் பக்கத்தில் ஒரு தனிச் சிற்பம்  அம்மன்  அம்மன் திருமுன்னின் முன்பு உள்ள அம்மன் சிலை வழியில் சாலையின் பக்கத்தில் சிதைந்த கோயிலின் தூண்கள்  வழியில்  மணலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலையில் காட்டாம்பூண்டி என்று ஒரு ஊர். அங்கு சாலை ஓரத்தில் ஒரு வினோதமான காளி கோயில்.  அருகில் பூவாத்தம்மன் கோயில் பக்கத்தில் லட்சுமி நாராயணர்.

ஜம்பை - பகுதி 2 - ஜம்புநாதேசுவரர் கோயில்

படம்
சிறப்புகள்  சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் விரிவாக்கப்பட்ட பழமையான கோயில். ராஷ்டிரகூடர்கள் கால அழகிய சிற்பங்கள்  கல்வெட்டுகள்  பயணம்  பயண விவரங்களை ஜம்பை - பகுதி 1 - ஜம்பை மலை இடுகையில் காணவும். ஊருக்குள் சாலையின் ஒரு வளைவில் இடது புறமாக திரும்பும் தெருவில் உள்ளது ஜம்புநாதேசுவரர் கோயில். கோயில் அமைப்பு கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடையாத நிலையில் கலசங்கள் இல்லாத விமானங்கள், முறையாக நிறுவப்படாத இறைத் திருவுருவங்கள், புல் புதர் மண்டிக் கிடக்கும் தரை, புனரமைப்புக்காக காத்திருக்கும் பகுதிகள் என்று  இருந்தாலும் வழிபாட்டில் உள்ளது. சில பெண்கள் வந்து அம்மனுக்கு விளக்கேற்றி விட்டுச் சென்றனர். வெளித் திருச்சுற்று  இரு மதில்கள், இரு கோபுரங்கள், இரு திருச்சுற்றுகள் கொண்ட கோயில். வெளி கோபுரம் தரைத் தளம் மட்டுமே கொண்ட மொட்டை கோபுரம். வெளி கோபுரம் - உட்புறமிருந்து வெளி திருச்சுற்றில் மேற்கே கோபுரத்தின் வலது புறம் கிழக்கு நோக்கிய அம்மன் திருமுன். அதன் முன் அம்மனது நந்திக்கான மண்டபம். அதை அடுத்து சிவன் கோயிலில் உள் மதிலும் அதன் கிழக்