இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணாயிரம்

படம்
  அமைவிடம் எண்ணாயிரம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாக செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1068 பழம் கல்வெட்டுகளில் 'சிங்கபுரி'   என்று அழைக்கப்படும் இன்றைய செஞ்சி, 'திண்டீசுரம்' என்ற திண்டிவனம், 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம், விழுப்பரையபுரம்' என்ற விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதி பல்லவர் காலம் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக  இருந்துள்ளது. இந்த சிறு நிலப்பரப்பில் அருகருகே பல பல்லவர், சோழர் காலத்தில் எழுப்பப் பட்ட கோயில்களும், பிற்கால விரிவாக்கங்களும், கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் எண்ணாயிரம், எசாலம், பிரம்மதேசம், தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன. முதல் மூன்று அருகருகே மூன்று கி மீ

நெடுங்குணம் - 7: பூமால் செட்டி குளம், ஆங்கிலேயர் சின்னங்கள், மலை மாதா கோயில்

படம்
பூமால் செட்டிக் குளம் நெடுங்குணம் ஊரைத் தாண்டியதும் சிறிது தூரத்தில் மூன்று பக்கங்களில் மரங்களால் சூழப்பட்ட ஒரு குளம். பூமால் செட்டிக் குளம் தகவல் பலகை நெடுஞ்சாலையின் மேற்கே 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பூமால் செட்டிக் குளம் இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குளம் தீர்க்காசலேசுவரர் கோயிலுக்கு உரியது. பங்குனி மாதம் இக்கோயிலில் உள்ள முருகரின் தெப்ப உற்சவம் இக்குளத்தில் நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் கால வரலாற்றுச் சின்னங்கள்  பூமால் செட்டிக் குளத்தின் மேற்கு கரையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பயணியர் விடுதி ஒன்று சிதைந்து காணப்படுகிறது. இது 15 ஆண்டுகள் முன்புவரை பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிகிறது.   பாழடைந்த நெடுங்குணம் பயணியர் விடுதி அதன் அருகில் சுமார் 10 அடி நீளமுள்ள 2 பீரங்கிகள் உள்ளன. இவை 18 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற வந்தவாசி போரின் போது பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பீரங்கிகள் மலை மாதா கோயில் நெடுங்குணம் மலையின் தெற்கிலுள்ள சிறு குன்றில் அமைந்துள்ளது மலை மாதா கோயில் என்று அழைக்கப்படும் தூய லூர்து அன்னை தேவாலயம். ஃபிரான்சு நாட்டில் 1835 ஆம் ஆண்டு பிறந்த அ

நெடுங்குணம் - 6: கல்வெட்டுகள், சதிக்கற்கள்

படம்
 கல்வெட்டுகள்  தீர்க்காசலேசுவரர் கோயிலிலும் ராமச்சந்திர பெருமாள் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன, இவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜயநகர பேரரசு, தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஆகும்.  ஊர்ப்பெயர் 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் 'ஜயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்றக் கோட்டத்து மேல்குன்ற நாட்டு நெடுங்குன்றம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிவன் கோயில் பூசைக்கு  ஏரி, நன்செய் நிலம் தானம்  பொ.ஆ. 1527 தீர்க்காசலேசுவரர் கோயில் கல்வெட்டு "நெடுங்குன்றம் நயினார் ஈசாண்ட நயினாருக்குச் சகல பூசையும் நடக்க ஸ்ரீமது இம்மடி திருமலை நாயக்கர் காரியத்துக்குக் கடவ நமச்சிவாய நாயக்கர் தர்மமாக அல்லாள பிள்ளை" என்பவர் நெடுஙகுன்றம் எரிக்குத் தென்கிழக்கில் உள்ள தாங்கலும், புறவடை நாலும் தானமாகக் கொடுத்ததாய் குறிப்பிடுகிறது. தாங்கல் என்றால் ஏரி, குளம். புறவடை என்றால் நன்செய் நிலம். பெருமாள் கோயில் திருவிழா, பராமரிப்புக்கு கிராமம் தானம்  பொ.ஆ. 1544 ராமசந்திர பெருமாள் கோயில் ஸ்ரீ அச்சுத வீர மகா தேவராயர் காலக் கல்வெட்டு "ஸ்ரீ ராமச்சந்திர பெருமாளுக்கு வேப்