இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எசாலம் இராமநாதீசுவரர் கோயில்

படம்
அமைவிடம் எசாலம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாகச் செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம். செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதியில் உள்ளது எசாலம். இப்பகுதி பல்லவர் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. எசாலத்தில் இருந்து மூன்று கி மீ தொலைவுக்குள் எண்ணாயிரம், பிரம்மதேசம், 14 கிமீ தொலைவில் தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எசாலத்தின் மக்கள் தொகை 2697. ஊர்ப் பெயர் கல்வெட்டுகளில் எசாலம் 'எய்தார், எதார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அது 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில், பல்குன்றக் கோட்டத்தில், ராஜராஜ வளநாட்டில், பனையூர் நாட்டில் இருந்த பிரம்மதேயமாகிய ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற தனியூரின்' ஒரு பிடாகையாக (பகுதி) இருந்தது. பயணம்  பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் நா