சிறப்புகள் ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயில். ஊரின் பெயர் காரணமாகத் திகழும் மலை. தீர்காசலேசுவரர் கோயில் இரு கோயில்களையும், மலையையும் இணைக்கும் சுகப் பிரம்மத்தின் புராணம். ராமர் கோயில் மண்டபத் தூண்களிலும், கோபுரங்களின் உட்சுவர்களிலும் உள்ள அழகிய சிற்பங்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மலை மாதா கோயில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள். மூன்று சதிக்கற்கள். ஆங்கிலேயர் கால பயணியர் விடுதியும், பீரங்கிகளும் தீர்க்காசலம் என்ற நெடுங்குன்றம் - மேற்கிலிருந்து அமைவிடம் நெடுங்குணம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அருகிலுள்ள நகரம் சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள சேத்துப்பட்டு. மாநில நெடுஞ்சாலை எண் 115 (செய்யூர்-வந்தவாசி-போளூர்) நெடுங்குணத்தின் வழியே செல்கிறது. திருவண்ணாமலையில் இருந்து 47 கிமீ, வந்தவாசியில் இருந்து 25 கிமீ மற்றும் ஆரணியில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது நெடுங்குணம். ஊர்ப் பெயர் நெடுங்...
கருத்துகள்
கருத்துரையிடுக