இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வழுதலங்குணம் தீர்த்தங்கரர் சிற்பம், கல்வெட்டு, படுக்கைகள்

படம்
பயண நாள் 1 4/07/2022 சுபகிருது ஆண்டு, ஆனி மாதம், 30 ஆம் நாள் வியாழக் கிழமை அமைவிடம் வழுதலங்குணம் திருவண்ணாமலைக்கு வடகிழக்கில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் உள்ள சோமாசிபாடி வழியாக 18 கிமீ தூரம். கீழ் பெண்ணாத்தூர் பை பாஸ் வழியாக 23 கிமீ தூரம். அவ்வூருக்கு வடக்கே 2 கிமீ தூரத்தில் உள்ளது 'மட்டமலை'. ஏரிக்கரை வழியாக கரடுமுரடான ஜல்லி சாலை, மண் சாலை, ஒற்றையடிப் பாதை,  வயல்கள் வழியாக செல்ல வேண்டி உள்ளது. கீழ் பெண்ணாத்தூர் - அவலூர்பேட்டை சாலையில் உள்ள மேக்களூரில் இருந்தும் வழி உள்ளது. வழிகாட்டிப் பலகை வழுதலங்குணத்தில் நீர் நிறைந்த பெரிய குளம் மட்ட மலையின் வடக்குப் பக்கத்தில் வயல்களில் இருந்து மேலே செல்ல படிகள் தெரிகின்றன.  மேலே செல்ல படிகள் சுமார் 70 படிகள் ஏறினால் கல்படுக்கைகளும் தீர்த்தங்கரர் சிற்பமும் அமைந்துள்ள இடத்தை அடையலாம்.  சமணப் படுக்கைகள் ஒரு பெரிய நீண்ட வளைந்த பாறை மற்றொரு பாறை மீது குடை போல கவிந்திருக்க அதன் அடியில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. சமணப் படுக்கைகள் சமணப் படுக்கைகள் தீர்த்தங்கரர் சிற்பம் இங்கு அமர்ந்த நிலையில் ஒரு தீர்த்தங்கரர் உள்ளார்.  வழுதல

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்

படம்
அமைவிடம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தின் தலைநகர் செங்கம். செய்யாற்றின் தென்கரையில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக 33 கிமீ தூரம்.   இலக்கியத்தில் செங்கம் மலைபடுகடாம் பத்துப்பாட்டு எனும் சங்க காலத் தொகுப்பில் உள்ள பத்தாவது நூல். ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது தலைவன் ஒருவனிடம் பரிசில் பெற்ற விறலியர், பாணர், கூத்தர், பொருனர் முதலியோருள் ஒரு கலைஞன் வேரொருவனுக்குத் அத்தலைவனது பெருமையைக் கூறி, அவன் ஊருக்குச் செல்லும் வழியைச் சொல்லி வழிகாட்டுவதாகும் (ஆற்றுப்படுத்துவது). மலைபடுகடாம் ' இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்'  என்ற புலவர்  'பல்குன்றக் கோட்டத்துச்  செங்கண்மா த்து வேள் நன்னன் சேய் நன்னன்'  என்பவனைப் பாடியது. செங்கண்மா இன்றைய செங்கம். (இந்த நன்னன் சங்க இலக்கியங்கள் வசை பாடும் பெண்கொலை புரிந்த நன்னன் அல்ல). சங்க காலத்திற்குப் பின் செங்கம் குறிப்பிடத்தக்க தனி வரலாறு கொள்ளவில்லை. சிறப்பு சோழர் கால ரிஷபேசுவரர் கோயில் நாயக்கர் கால வேணுகோபால பார்த்தசாரதி கோயில் அதன் ராமாயண ஓவியங்கள் மகாவீரர் சிலை சுற்றியுள்ள இடங்கள

செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பகுதி 2 - ராமாயண ஓவியங்கள்

படம்
இந்த கோயில் அமைப்பு சிற்பங்கள் ஆகியவற்றைப் பற்றிய முந்தைய பதிவு: செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பாகம் 1 - கோயில் அமைப்பும் சிற்பங்களும் இது இக்கோயிலில் காணப்படும் ராமாயணத் தொடர் ஒவியங்களைப் பற்றிய பதிவு. சுவாமி சந்நிதியின் முன் ஒரு அழகிய முக மண்டபம் உள்ளது. அதன் அகன்ற கூடத்தின் கூரையின் நடுவில் ஒரு சதுரமான சிற்ப வேலைப்பாடு உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் ராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  இவ்வோவியங்களில் காணப்படும் சில காட்சிகள் வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ இல்லை. உதாரணமாக. யுத்த காண்டத்தில் அனுமனும், அங்கதனும் மண்டோதரியைத் தாக்குவதும், ராவணன் சக்திப் படையை ஏவி அவளை விடுவிப்பதும் மேலிரு ராமாயணங்களில் இல்லை. ஆனால், தெலுங்கு மொழியில் உள்ள ரங்கநாத ராமாயணத்தில் இக்காட்சிகள் உள்ளன. மேலும், எனவே, இந்த ஓவியங்கள் ரங்கநாத ராமாயணத்தை அடியொற்றித் தீட்டப்பட்டன எனலாம். இது நாயக்கர் காலக் கலைபணி என்பதும் இக்கருத்துக்கு வலு சேர்க்கிறது. ராமாயண ஓவியங்கள் ராமாயணத்தின் யுத்த காண்டம் மட்டுமே வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் தெற்குப் பக்கத்தில் போர்க்கள காட்சிகளுடன் தொடங்கி