இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீழ் மாவிலங்கை

படம்
பயணம் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக . சார்வரி (2020 - 21) ஆண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குப் பயணங்கள் இல்லாமல் போனது. பிலவ ஆண்டின் முதல் பயணம் இது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை வரும் வழியில் ஆனி 32 ஆம் நாள் (16/07/2021) கீழ்மாவிலங்கை குடைவரையைக் கண்டேன், அமைவிடம்  கீழ் மாவிலங்கை விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சங்க காலம் முதல் உள்ள 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஊர். சங்க காலப் பெயரான மாவிலங்கை இன்றுவரை மாறாது வந்துள்ளது இவ்வூரின் சிறப்பு. அக்கால மாவிலங்கையை சாலை இரண்டாக பிரித்துவிட்டது போலும். சாலையின் மேற்கே உள்ளது மேல் மாவிலங்கை. கீழ் மாவிலங்கை திண்டிவனம் வந்தவாசி சாலையில் சுமார் 13 கிமீ தூர த்தில் அமைந்துள்ளது. சென்னை பைபாஸ் - மேற்கண்ட சாலை சந்திப்பில் இருந்து சுமார் 8 கிமீ தூரத்தில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து செல்லும்போது சாலையின் வலது புறம் சுமார் 1 கீமீ தொலைவில் உள்ளது. திண்டிவனம் வந்தவாசி சாலையிலேயே குடைவரைக்கு வழிகாட்டும் பலகை உள்ளது.  குடைவரை ஊருக்குள் நுழைவதற்கு முன்பே சாலையின் வலது புறம் துருப்பிடித்த வழிகாட்டிப் பலகை ஒன