கீழ் ராவந்தவாடி அம்மா குளம்

தமிழகத்தில் கலவிச் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் இரண்டு. அவை இரண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. ஒன்று சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளம். மற்றொன்று கீழ் ராவந்தவாடியில் உள்ள அம்மா குளம். கீழ் ராவந்தவாடியில் பல்லவர் கால நடுகற்களும் உள்ளன.

சென்ற நாள்:12 ஜூலை, 2022

அமைவிடம்

கீழ் ராவந்தவாடி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் உள்ளது. அம்மா குளம் அவ்வூரில் தானிப்பாடி சாலையில் இருந்து வடக்காக பிரிந்து செல்லும் சிறு சாலையில் சுமார் 0,5 கிமீ தூரத்தில் உள்ளது.

கூகிள் வரைபடம்: https://goo.gl/maps/fSWKP4iz6EE1

10 ஆண்டுகளுக்கு முன் இந்த குளம் இவ்வாறு பராமரிப்பின்றி இருந்தது.


பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இக்குளம் சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளத்தை விட சிறியது.  நாற்புறமும் படிக்கட்டுகள், நாற்புறமும் நுழை வாயில்கள், மதில் சுவர்களுடன் காணப்படுகிறது. குளத்தின் மூலைகளிலும் நுழைவாயில்களிலும் ரிஷபங்களின் சிற்பங்கள் உள்ளன.


இந்த குளம் செஞ்சி நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கிபி 16-17ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசரால் வெட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இந்தக் குளம் சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன் குளத்தை போன்ற அமைப்பும் சிற்பங்களும் கொண்டுள்ளதால் இரு குளங்களும் ஒரே கால கட்டத்தைச் சார்ந்தவை எனலாம். ஆனால், சின்னையன் குளத்தைப் போல இந்தக் குளத்தைப் பற்றி செவிவழிச் செய்திகள் எதுவும் இல்லை.

சிற்பங்கள்

இக்குளத்தின் மதில்சுவரின் உள் பக்கத்திலும், படிகளிலும் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

நுழைவாயில் மூலைகள்

சின்னியம்பேட்டை சின்னையன் குளத்தோடு ஒப்பிடுகையில் இந்த குளத்தில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் குறைவு. ஆனால், மொத்த சிற்பங்களில் கலவிச் சிற்பங்களின் எண்ணிக்கை அதிகம். சின்னியம்பேட்டை சின்னையங்குளத்தைப் போலவே இந்த சிற்பங்களும் அப்பட்டமானவை.  இது போன்ற காட்சிகள் நாயக்கர் காலத்து தேர்ச் சிற்பங்களிலும் இடம் பெற்றுள்ளன. நாயக்கர் கலைப்பாணியின் ஒரு கூறு என்று கொள்ளலாம்.

சில இராமாயண, புராண சிற்பங்கள், இறைவர்கள், சித்தர்களின் சிற்பங்கள் ஆகியவையும் உள்ளன.

சில சிற்பங்கள் 16 -17 அம் நூற்றாண்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. கோலாட்டம், போர்க்காட்சிகள், புலியுடன் போரிடும் வீரர்கள், வேட்டை காட்சிகள் ஆகியவற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன.

சில உயிரினங்களின் சிற்பங்கள் குறிப்பாக படிகளில் காணப்படுகின்றன.

மதிலின் உள் சுவற்றில் உள்ள சிற்பங்கள்

புராணக் காட்சிகள்

பிச்சாண்டவரும் முனி 'பத்தினி'களும்

தாருகாவன முனிவர்கள்

கிராதார்ஜுன்யம் 1 (வலதிலிருந்து இடமாக)
அர்ஜுனன் தபசு -பன்றி - கிராதனுடன் வாய்ச்சண்டை -  வில் சண்டை

கிராதார்ஜுன்யம் 2 (வலதிலிருந்து இடமாக)
அர்ஜுனன் கிராதனுடன் வில் சண்டை - சிவனை அர்ஜுனன் வில்லால் அடித்தல் - மல்யுத்தம் - சிவ பார்வதி காட்சி
மேற்படிக் காட்சிகள் வியாசரின் மகாபாரத விவரிப்பை மிகவும் ஒத்துள்ளது https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section38.html

ராமர் மரத்தின்பின் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்லுதல்

லக்ஷ்மணன் - ராமன்

அனுமன்

சமயம் 

நுழைவாயில் மூலையில் விநாயகர்

விநாயகர் முன் பாடல், இசை, நடனம்



முருகன் வள்ளி தெய்வானை மயிலுடன்

காளத்திமலை குடுமித் தேவரின் குருதி வழியும் கண்ணை குணமாக்க, 
திண்ணன் தன் இரண்டாவது கண்ணையும் நோண்டி எடுக்க எத்தனித்தல்.
மறைந்திருந்து பார்த்து வணங்கும் சிவகோசரியார்

அனுமன், சீதை, ராமன், லக்ஷ்மணன்

வேணுகானத்தில் கட்டுண்ட ஆவினம்

கஜலட்சுமி

யானை சிவபூஜை செய்தல்


காமமும் கடவுளும்

கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பரும், கழுதைப் புணர்வும்

கலவிச் சிற்பங்கள்

கைப்பிடித்து இழுத்தல்

நீரள்ளுபவளை கைப்பிடித்து இழுத்தல்




கீழ் ராவந்தவாடி அம்மாகுளத்திலும், சின்னியம்பேட்டை சின்னையன் குளத்திலும் உள்ள கலவிச் சிற்பங்களிந் தனித்தன்மை கேலிப்படம் (cartoon) தன்மை கொண்ட மிகையாக நீண்ட ஆண்குறி. 





















நாய்கள் புணர்ச்சி

தொடர் ஆண் ஒரின வாய்ப் புண்ர்ச்சி



வேட்டை




பொது மக்கள் 

பாம்பாட்டி

குழலிசையும் கோமாளிகளும்

சித்தர்

தயிர் கடைதல் - தம்பதி

மதுவருந்தி மகிழும் தம்பதி

பெண் ஹூக்கா பிடித்தல்

ஹூக்கா பிடித்தல்

ஹூக்கா பிடித்தல்

உறக்கம்

உறக்கம்


கோலாட்டம், மிருதங்கம், நடனம்

நடனம்

கோலாட்டம்

கோலாட்டம்

கோலாட்டம்

கோலாட்டம்

கோலாட்டம்

வெட்டவெளியில் மலம் கழிக்கும் இருவர், மலம் தின்னும் பன்றி, நாய்

போர்க் காட்சிகள்







யானைகள் மனிதர்களை தூக்கி வீசுவது

ஒரு யானை மனிதனை தூக்கி வீச இன்னொன்று மரத்தை பிடுங்கி வீசுவது. இரண்டின் மேலும் பாகர்கள்

யானைச் சண்டை

யானைச் சண்டை


இரு சிங்கங்கள் ஒரு ஆனையைத் தாக்கி மல்லாக்க வீழ்த்துவது

ஆட்டுச்சண்டை

அன்னங்கள்

அன்னங்கள்


வெளிநாட்டினர்



படிகளில் உள்ள சிற்பங்கள்











நடுகற்கள்

இதே ஊரில் உள்ள பல்லவர் கால நடுகற்களைப் பற்றிய பதிவு:

செங்கம் நடுகற்கள் - சின்னியம்பேட்டை - கம்பவர்மன் கால எருமைத் தொறு மீட்ட வீரர்கள்



கருத்துகள்

  1. கீழ் ராவந்தவாடியில்
    உள்ள அம்மா குளம்
    பற்றிய தகவல்களும்
    அங்குள்ள சிற்பங்களும்
    ஆச்சர்யப்படுத்துகின்றன.
    அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்