இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்வராயன்மலை தொல்லியல் பயணம் 2026

படம்
இது 28/2 மற்றும் 01/03/2026 இரு நாட்களில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்டு பார்த்த இடங்களை பற்றிய தொகுப்பு. வஞ்சிக்குழி இரு நடுகற்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வஞ்சிக்குழி. இவ்வூரின் கிழக்கே உள்ள வேடியப்பன் கோயிலில் இரண்டு நடு கற்கள் உள்ளன. காலம் முதலாம் நரசிம்ம வர்மன் ஆட்சியாண்டு 24 (பொ.ஆ. 654). இந்த நடுகல் வஞ்சிக்குழியில் நடைபெற்ற ஒரு பூசலில் இறந்தபட்ட வீரனுக்காக எடுக்கப்பட்டது. இதில் வீரன் போரிடும் நிலையில் இடது கையில் வாளையும், வலது கையில் குறுவாளையும் ஏந்தி உள்ளான். ஒரு அம்பு அவன் மார்பிலும் இரு அம்புகள் அவன் இடது தொடையிலும் பாய்ந்துள்ளன. கல்வெட்டு வாசகம்: "கோவிசை நரசிங்க பரும ற்க்கி யாண்டு இருபத்தி நால ஆவது வஞ்சிகுழி உடைஆன் கலிமந்த அதி அரைசன் அரஊர் மேல் சென்று பட்டான்." இடக்குறி:  11°57'18.1"N 78°48'27.6"E கள்ளக்குறிச்சி மாவட்டம் வாரம் அருகில் நடுகல் விஜயநகர கால நடுகல் இடக்குறி:  11°42'37.5"N 78°39'35.6"E   கள்ளக்குறிச்சி மாவட்டம் வாரம் அருகில் தொல் ச...

விழுக்கம் ஸ்ரீ ஆதிநாத பகவான் ஜினாலயம் , கொற்றவை

படம்
  பயணம் விசுவாவசு ஆண்டு பங்குனி மாதம் ஆம் 16 ஆம் நாள் (30/032026) திருவண்ணாமலையில் இருந்து  ஸ்கூடரில் பயணம். மேல் சித்தாமூர் பார்சுவநாதர் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டு விழுக்கம் வந்தேன். அமைவிடம் திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள தீவனூருக்குச் சற்றுத் தொலைவில் வடக்கு நோக்கிப்பிரிந்து செல்லும் சிறிய சாலை வழியாக 1.4 கி.மீ. தொலைவில் விழுக்கம் ஆதிநாதர் கோயில் உள்ளது. செஞ்சியிலிருந்தும் திண்டிவனத்திலிருந்தும் சுமார் 15 கிமீ.  இவ்வூரைச்‌ சுற்றி உள்ள  மேல் சித்தாமூர், தொண்டுர்‌, அகலூர்‌, செஞ்சி, திருநாதர்‌ குன்று, சிங்கவரம்‌, நெகனூர்பட்டி, பெருமுகை, விழுக்கம்‌ ஆகிய ஊர்களில் சமண தொல்லியல் சின்னங்கள், கோயில்கள் உள்ளன. பெயர் தீர்த்த்ங்கரர் பெயர்களுக்கு முன்னால் வரும் ஸ்ரீ 1008, 1008 முறை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ....... யைக் குறிக்கிறது. உச்ச மரியாதை. ஆதிநாதர் - முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர். பல வடநாட்டு ஜைனர்கள் வருகை புரிவதால் மும்மொழிப் பெயர்ப் பலகை. காலம் ஆதிநாத பகவான் ஜினாலயம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1970 இல் ப...