சிறப்பு
- தமிழகத்தின் மிக நீளமான அரங்கன். அவருக்கு மூத்தவர்.
- காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடையே நடை சாத்தப்படாமல் திறந்து இருக்கும் கோயில்.
பயணம்
விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (20-09-19) அன்று ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன். தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையிலிருந்து தெற்கே தென்பெண்ணையின் வடகரையில் மணலூர்பேட்டை - சுமார் 26 கிமீ தூரம்; திருக்கோவிலூரில் இருந்து சுமார் 15 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். மணலூர்பேட்டையில் இருந்து ஆற்றைப் பாலம் மீது கடந்து மேற்கே பிரிந்து ஆற்றின் தென்கரையை ஒட்டிச் செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது ஆதிதிருவரங்கம். ஆற்றின் வடகரையில் உள்ள ஜம்பைக்குச் சென்ற பிறகு ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன்.
கோயில்
கோயில் இரு மதில் சுவர்கள் இரு கோபுரங்கள் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.
 |
கோயில் வெளி மதில் |
 |
கோயில் வெளி கோபுரம் - கிழக்கு நோக்கியது |
அடுத்த நாள் புரட்டாசி முதல் சனிக்கிழமை. பெரும் பக்தர் கூட்டத்தை முறைப்படுத்த, அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் வெளித் திருச்சுற்றில் வடகிழக்கில் ஒரு உயரமான தானியக் கிடங்கு. மேலே நாற்புறமும் கிரீவக் கோட்டங்களோடு கூடிய கிரீவம், மகா நாசிகைகளோடு கூடிய சிகரம், கலசம். செங்கல் கட்டுமானம். உள்ளே மர உத்திரங்களால் தாங்கப்பட்டுள்ளது. இத்தனை பெரிய கிடங்கு கட்ட கோயிலுக்கு எவ்வளவு நிலம் இருந்திருக்க வேண்டும்! இது போன்ற தானியக் கிடங்குகள் திருவரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், பாபநாசம் பாலைவனநாதர் கோயில் ஆகிய இடங்களிலும் உள்ளன.
 |
தானியக் கிடங்கு |
 |
தானியக் கிடங்கு - கூரை உட்புறத் தோற்றம் |
தானியக் கிடங்கு அருகில் இரு மணி மண்டபங்கள். இதுபோன்ற உயரமான நான்கு தூண்கள் மீது அமைந்த கோபுரங்களோடு கூடிய மண்டபம் செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோயில் உள்ள குன்றின் அடிவாரத்திலும் உள்ளது.
 |
மணி மண்டபம் 1 |
 |
மணி மண்டபம் 2 |
 |
உள் கோபுரத்தின் முன் உள்ள மண்டபத் தூண் |
உள் மதில் சுவரில் கிழக்கு நோக்கிய நான்கு நிலை கோபுரம் ஒன்று உள்ளது அதன் முன் புறம் ஒரு மண்டபம்.
 |
உள் கோபுரம் |
 |
கோபுரச் சுவர் |
 |
கோபுரச் சுவரில் சிற்பங்கள் |
இந்த கோபுரத்தில் உள்ளது போன்ற சிறு கண்ணன், அனுமன், கருடன் முதலிய சிற்பங்கள் உள் மதிலின் வெளிச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
 |
உள் மதில் சுவர் சிறு சிற்பம் |
உள் திருச்சுற்றில் ரங்கநாயகி தாயார், வரதராஜப் பெருமாள், வேதாந்தக தேசிகர், ராமர் பட்டாபிஷேகம், துர்க்கை, சக்கரத்தாழ்வார், முதலியவர் திருமுன்கள் உள்ளன. தாயார் திருமுன் முன்னால் மகிழ மரம். கூட்டத்தை முறைப்படுத்துவதற்காக எங்கும் மூங்கில்களால் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருந்ததால் உள்ளே விரிவாக பார்க்க இயலவில்லை.
பெருமாள்
ஆதிதிருவரங்கத்து அரங்கன் தமிழகத்திலேயே மிக நீளமான அரங்கர் என்கிறார்கள் - 27 அடி
- திருவரங்கம் - 21 அடி
- திருவட்டாறு - 22 அடி
- சிங்கவரம் - 24 அடி
- திருவனந்தபுரம் - 18 அடி
தலை பின்னால் ஐந்து தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல்தர தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் வலது காலை தாங்குகிறார். இடையே தொப்பூழில் பூத்திருக்கும் தாமரை மீது அமர்ந்திருக்கும் நான்முகன். கீழே தலை அருகில் கருடாழ்வார்.
தெற்கு பக்கம் உள்ள தலையை கிழக்கு முகமாக திருப்பியுள்ள பெருமாள் வலது கையை தலைக்கு அடியில் வைத்து இடது கையை மடித்து கடக முத்திரை காட்டுகிறார் - பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் நிலை. வலது காலை மண்மகள் தொடை மீது வைத்துள்ளார்.
இரு தேவியருடன் போக சயனம். திருவரங்கத்தில் யோக சயனம்.
புராணம்
முதல் யுகத்தில் முதல் அவதாரமான மச்சாவதார காலத் தலம் என்றும் திருவரங்கத்துப் பெருமாள் இரண்டாம் யுகத்தில் தோன்றிய 7வது அவதாரமான ராமர் காலத்தவர் எனவும் அதனால் இவர் மூத்த பெருமாள் என்பது புராணம்.
சுருதகீர்த்தி என்ற மன்னன் இறைவனை வணங்கி குழந்தை பாக்கியம் பெற்றது.
பெருமாள் மனது வைத்தால் மட்டுமே அங்கு சென்று அவரை தரிசிக்க முடுயும் எனும் நம்பிக்கை.
வேதங்களை அசுரன் சோமுகன் என்பவனுடன் இருந்து இருந்து மீட்டு நான்முகனிடம் தந்து உபதேசம் செய்த இடம்.
சந்திரன் சாபவிமோசனம் பெற்ற இடம்.
நன்றிக்கடன்
காணொளி
கருத்துகள்
கருத்துரையிடுக