செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பகுதி 2 - ராமாயண ஓவியங்கள்
இந்த கோயில் அமைப்பு சிற்பங்கள் ஆகியவற்றைப் பற்றிய முந்தைய பதிவு:
செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பாகம் 1 - கோயில் அமைப்பும் சிற்பங்களும்
இது இக்கோயிலில் காணப்படும் ராமாயணத் தொடர் ஒவியங்களைப் பற்றிய பதிவு.
சுவாமி சந்நிதியின் முன் ஒரு அழகிய முக மண்டபம் உள்ளது. அதன் அகன்ற கூடத்தின் கூரையின் நடுவில் ஒரு சதுரமான சிற்ப வேலைப்பாடு உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் ராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இவ்வோவியங்களில் காணப்படும் சில காட்சிகள் வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ இல்லை. உதாரணமாக. யுத்த காண்டத்தில் அனுமனும், அங்கதனும் மண்டோதரியைத் தாக்குவதும், ராவணன் சக்திப் படையை ஏவி அவளை விடுவிப்பதும் மேலிரு ராமாயணங்களில் இல்லை. ஆனால், தெலுங்கு மொழியில் உள்ள ரங்கநாத ராமாயணத்தில் இக்காட்சிகள் உள்ளன. மேலும், எனவே, இந்த ஓவியங்கள் ரங்கநாத ராமாயணத்தை அடியொற்றித் தீட்டப்பட்டன எனலாம். இது நாயக்கர் காலக் கலைபணி என்பதும் இக்கருத்துக்கு வலு சேர்க்கிறது.
ராமாயண ஓவியங்கள்
ராமாயணத்தின் யுத்த காண்டம் மட்டுமே வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் தெற்குப் பக்கத்தில் போர்க்கள காட்சிகளுடன் தொடங்கி, கிழக்கு, தெற்குப் பக்கங்கள் வழியாக நீண்டு கிழக்கில் ராமர் பட்டாபிஷேக காட்சியுடன் நிறைவுறுகின்றன.
தெற்குப் பக்கம்
![]() |
தெற்குப் பக்கம் - முழு ஓவியம் |
கீழ்ப் பகுதி
![]() |
இலக்குவன் - இந்திரஜித் போர் |
நடுப்பகுதி - போர்க் களக் காட்சிகள்
மேல் பகுதி
![]() |
அனுமன் சஞ்சீவி மலையைக் கொணர்தல் |
இந்திரஜித் நிகும்பலையாகம் செய்வது ???
மேற்குப் பக்கம்
கீழ்ப் பகுதி - இடமிருந்து வலமாக
![]() |
விபீடணன் ராமரை சந்தித்து சரணாகதி |
![]() |
விபீடணனுக்கு முடி சூட்டுவது |
நடுப்பகுதி - இடமிருந்து வ்லமாக
![]() |
இராவணனின் பாதாள ஹோமம் - வானவர்கள் அதை நிறுத்த முற்சி செய்து முடியாமல் போதல் |
![]() |
ராவணனின் பாதாள ஹோமத்தைக் கலைக்க மண்டோதரியை அனுமனும், அங்கதனும் முடியைப் பிடித்திழுத்து ஆடை கிழித்தல் |
![]() |
வேறு வழியின்றி ராவணன் யாகத்தைக் கலைத்து மண்டோதரியைக் காப்பது. |
மேல் பகுதி
வடக்குப் பக்கம்
இராமன் இராவணனை வென்ற செய்தியை சீதையிடம் அனுமன் கூறுவது முதல் அயோத்திக்கு செல்லும் வரையிலான காட்சிகள்
![]() |
முழுக் காட்சி |
வடக்கு- கீழ் வரிசை. இதில் நான்கு காட்சிகள் உள்ளன. வலமிருந்து இடமாக:
![]() |
அசோக வனம் (ஆனுமன் சீதையிடம் ராமன் வென்றதைக் கூறி ராமனிடம் செல்ல அழைத்தல், செல்ல சீதையை சேடியர் குளிப்பாட்டுவது) |
![]() |
இசைக்கலைஞர்கள் இசைத்தவாறு முன்செல்லசீதையைப் பல்லக்கில் தூக்கிவரும் காட்சி. பல்லக்கின் முன் விபீஷணன். இது இப்பகுதியில் அக்காலங்களில் இருந்த இசை மரபைக் காட்டுவதாக உள்ளது. |
![]() |
அனுமன் ஆசி பெறுதல் |
வடக்கு- நடு வரிசை
![]() |
சீதை தீக்குளிக்கும் காட்சி (தீயும் சீதையின் கால்கள், தலையும் தெரிகின்றன. இடது புறத்தில் ராமன் கால், தலை தெரிகிறாது, வலப்புறம் மேலே பிரம்மன் சிவன் ஆகியவர்கள் பார்க்கின்றனர்.) |
மேற்கு பகுதி
![]() |
ராமர் பட்டாபிஷேகம் |
வலமிருந்து இடமாக
![]() |
மேலே வலப்புறம் இலக்குவன் வணங்கியபடி, பின்னால் முனிவர்கள் வாழ்த்தியபடி; கீழே வலப்புறம் அனுமன் மண்டியிட்டு வணங்கியபடி, பின்னால் சுக்ரீவன், ஜாம்பவான், விபீஷணன் முதலானோர் |
![]() |
ராமர் பட்டாபிஷேகம் (ராமனும் சீதையும் அரியணை மீது; அவர்கள் இடப்புறம் இலக்குவன் வணங்கியபடி; வலப்புறம் பரதன் 'வெண்குடை கவிக்க', பின்னால் சத்துருக்கனன் 'கவரி பற்ற' கீழே இடப்புறம் அனுமன் மண்டியிட்டு ' அரியணை தாங்க', வலப்புறம் அங்கதன் 'உடைவாள் ஏந்த' |
![]() |
மேலே பரதன், சத்துருக்கனன், பின்னால் விபீஷணன் முதலானோர் வணங்கியபடி; கீழே அங்கதன், சுக்ரீவன், ஜாம்பவான், வானரங்கள் |
(இராமர் பட்டாபிஷேக ஓவியத்தில் இந்தக் கோயிலைக் கட்டுவித்த தளவாய் நாயக்கனும் இருப்பதாகக் கூறப்படுகிறது. யார்?)
ரங்கநாத ராமாயணம்
ரங்கநாத ராமாயணம் தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணம். காகதீய அரசில் சிற்றரசராக இருந்த ரங்கநாதர் என்ற கோன புத்தா ரெட்டியால் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டது. இது ஏழு காண்டங்களைக் கொண்ட முழுமையான ராமாயணம். பண்டிதர்கள், பாமரர்கள் இருவர் நடுவேயும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. வால்மீகி ராமாயணத்தில் இருந்து சில வேறுபாடுகளை கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே நாட்டார் ராமாயண மரபைப் பெருமளவில் பயன்படுத்திய நூல் இது. ஆந்திர தோல்பாவைக் கூத்திற்குரிய மூலப் நூலே இந்த ராமாயணம்தான். இந்நூலின் ஆசிரியரான புத்தா ரெட்டி இசைக் கலைஞரும் கூட. இதனால் இந்த ராமாயணத்தை ஆந்திரத் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள் விரும்பி ஏற்றனர். அங்கிருந்து தோல்பாவைக் கூத்து தமிழகத்திற்கு வந்தது. மேலும் அறியப் படிக்கவும்:
கோயில் பற்றிய முதல் பகுதி:
துணை
ராமாயணப் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள்: செங்கம்; தமிழிணையம்; தகவலாற்றுப்படை
Chengam Venugopala Parthasarathi Temple; southindianpaintings.art
Chengam Venugopala Parthasarathi Temple; southindianpaintings.art
^செங்கம் - அர்ச்சுன பார்த்தசாரதி கோயில் ஓவியங்கள்; திருவண்ணாமலை மாவட்டத் தடயங்கள்;மணிவாசகர் பதிப்பகம்;2016
கருத்துகள்
கருத்துரையிடுக