இடுகைகள்

செங்கம் நடுகற்கள்: மேல் பள்ளிப்பட்டு

படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., ) & (செங். நடு. 71/1978) ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு யாண்டு ஒன்பதாவது (வ-) மிறையார் வே ணாடிளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாம்மு டைய பார தாயர் மக ன் தொறு மீ ட்டுப் ...........  ன் முகன் கோயில் - அரண்மனை;  பட்டன்(ர்) - உண்மையாளன்;  நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று;  பாரம் - கவசம் (பிங்.);  தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்;  மகன் - படைஆள், வீரன்;  மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான். முதலாம் பரமேச்சுர வர்மன் )பொ. யு. 668 - 669) இரண்டாம் மகேந்திர வர்மன் மகன், இரண்டாம் நரசிம்ம வர்மன் என்ற ராஜசிம்மன் தந்தை. அவனது ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செ...

ஆலகிராமம் யமதண்டீஸ்வரர் ஆலயம் - தமிழகத்தின் முதல் பிள்ளையார் சிற்பம்

படம்
பயணம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 14, 15 ஆம் தேதிகளில் ஆற்றுப்படை முன்னெடுப்பில்  திரு வே. பார்த்திபன், திரு கண. சரவணகுமார், திரு சி. பழனிசாமி ஆகியோர் வழிநடத்திய விழுப்புரம் மரபு நடையில் முதச் நாள் முதல் இடமாக நாங்கள் சென்றது ஆலகிராமம். அமைவிடம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள சிற்றூர் ஆலகிராமம். தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் உள்ள கூட்டேரிப்பட்டில் இருந்து மேற்கே 6 கிமீ தூரம்.  எமதண்டீஸ்வரர் கோயில் கிராமத்தின் எல்லையிலேயே சாலையின் இடது பக்கம் எமதண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயரின் உயிரை எடுக்கச் செய்த முயற்சி வினையாகி சிவ தண்டனை பெற்ற எமன் இங்குள்ள சிவனை வழிபட்டு குறை நீங்கினானாம். 2015 ஆம் ஆண்டு கோயில் திருப்பணிகளின் போது அங்கு அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசர், முருகன் மகா விஷ்ணு, ஐயனார் சிற்பங்கள் கிடைத்தன. இப்போது திருப்பணிகள் முடிந்து கோயில் புதுப் பொலிவுடன் உள்ளது.  எமதண்டீஸ்வரர் ஆலயம், ஆலகிராமம் மூத்த பிள்ளையார் புடைப்புச் சிற்பம் 2015 இல் கிடைத்த பிள்ளையார் பலகைச் சிற்பம் ம...

(இ)டாகினி என்னும் பெண் பேய் - சிற்பம், இலக்கியம், தொன்மம், தெய்வம்

படம்
இடாகினி இரு வகை. மனிதர்கள் அல்லது அவர்களின் பிணங்களைத் தின்னும் பேய்கள். அவர்கள்  காளியின் ஏவல் பெண்களாக சிறு தெய்வங்களாகவும் உள்ளனர்.  இந்து புராணங்கள், சாக்த மற்றும் திபெத்திய பௌத்த தாந்திரீக மரபுகள் ஆகியவற்றில் புழங்கும் தெய்வங்கள். இந்தக் கட்டுரை முதல் வகையைப் பற்றியது. சிற்பங்கள் 2026 ஆம் ஆண்டு மார்ச் 14, 15 ஆம் தேதிகளில் ஆற்றுப்படை முன்னெடுப்பில்  திரு வே. பார்த்திபன், திரு கண. சரவணகுமார், திரு சி. பழனிசாமி ஆகியோர் வழிநடத்திய விழுப்புரம் மரபு நடையில் இரண்டு இடாகினி சிற்பங்களைக் காண முடிந்தது. திரு வே. பார்த்திபன் இடாகினியை பற்றி சிலப்பதிகாரத்தை  அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். இவை பல்லவர் காலத்தைச் சார்ந்தவை (பொ.ஆ. 7 - 9 ஆம் நூற்றாண்டு). இடாகினி - ஒருகோடி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்தில் இருந்து மேற்கே 7 கிமீ தூரத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில், கூட ஒரு தவ்வை சிற்பத்துடன் இடக்குறி: 11.923069444444437, 79.43939444444442 உருவ அமைதி விரிந்த கூந்தல், கோரைப் பற்களுடன் திறந்த வாய், வற்றித் தொங்கிய முலைகள், இரு கைகள், இடது கையில் ஒரு மனித உடல், வலது...

கல்வராயன் மலை அருணா காட்டுப்பன்றிக் குத்திபட்டான் சதிக்கல்

படம்
பன்றிக்குத்திபட்டான் சதிக்கல் அமைவிடம் கல்வராயன் மலையில் சேலம் மாவட்டம் கருமந்துறைக்கு அருகில் உள்ள அருணா கிராமத்தில் சாலை ஓரம்.  பயணம் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வழினடத்திய கல்வராயன் மலை இரு நாள் பயணத்தின் இரண்டாம் நாள் 01-03-2026 அன்று இந்தச் சதிக்கல்லைப் பார்த்தோம். தெளிவான படம் நன்றி: kamal archives via instagram திருவண்ணாமலை பக்கத்து கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழிப்பத்தையும் அவற்றைத் தடுக்க விவசயிகள் மின்வேலி அமைத்துள்ளதையும் பார்த்திருக்கிறேன். அவ்வாறு விவசாய பயிர்களை காப்பாற்ற காட்டுப்பன்றிகள் கூட்டத்தைக்  கொன்று பன்றி தாக்கி தானும் இறந்த வீரன் (பன்றிக் குத்திப் பட்டான்). பன்றிகளுடன் போராடி இறந்த அவன் மூன்று வேட்டை நாய்கள்,  அவனுடன் உடன் கட்டை ஏறி இறந்த அவன் மனைவி ஆகியவர்களுக்காக வைக்கப்பட்ட சதிக்கல் இது. காலம் சிற்ப அமைதியைக் கொண்டு இந்த சதிக்கல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். சிற்ப அமைதி வீரன் வலது கையில் இடது கையில் உள்ள நீண்ட வில்லில் வலது கையில் உள்ள அம்பை நாணேற்றி எய்யும் நிலையில் உள்ளான். அவன...