அரகண்டநல்லூர் - ஒப்பிலாமணீசுவரர் கோயில் - பாகம் 2

பாகம் 1 ஐ பர்வையிட: இங்கே சொடுக்கவும்

அரகண்டநல்லூர்  ஒப்பிலாமணீசுவரர் கோயிலின் உள் திருச்சுற்று, மூலவர் திருமுன் தவிர மற்ற இடங்களை பாகம் 1 இல் பார்த்தோம். இந்த பாகத்தில் உள் திருச்சுற்றில் நுழைகிறோம்.

உள் திருச்சுற்று

உள் திருச்சுற்று கருவறையைச் சுற்றி உள்ள மூடிய நடை. 'திருநடை மாளிகை' என்ற இனிய பெயர் கொண்டது. திருநடை மாளிகை வட, கிழக்குப் பக்கங்களில் மூன்று வரிசைத் தூண்களும் மற்ற இரு பக்கங்களில் இரு வரிசைத் தூண்களும் கொண்டுள்ளது.

திருநடை மாளிகை - வட பகுதி

திருநடை மாளிகையின் வெளிசுவற்றை ஒட்டியவாறு உள்ள பரிவார தெய்வங்களைப் பார்ப்போம்.

கிழக்குத் திருச்சுற்று  - வட பகுதி 

கிழக்கு நோக்கியவாறு பால முருகனும், வேழச்செல்வியும் (கஜலக்ஷ்மி)

பாலமுருகன் 

பாலமுருகன் 

வேழச்செல்வி 

வேழச்செல்வி 

வடக்குத்  திருச்சுற்று

ஜேஷ்டா தேவி


கிழக்கு பார்த்தவாறு வடமேற்கு மூலையில் ஜேஷ்டா தேவி

ஜேஷ்டா தேவி
ஜேஷ்டா தேவி பற்றி விரிவான விளக்கங்கள், படங்களுக்கு சொடுக்கவும்: ஜேஷ்டா தேவி.

துர்க்கை 

துர்க்கை கருவறையின் வடபுற கோட்டம் ஒன்றில் வடக்கு நோக்கி அமைவது மரபு. இங்கு துர்க்கை தென்னோக்கி நின்றிருக்கிறாள். பின்கரங்களிஆழியும் சங்கும் ஏந்தி முன்கரங்களில் அபய, வரத முத்திரைகள் தாங்கி மகுடன் தலை மீது நிற்கிறாள். இடது புறம் நாகதேவதை.

துர்க்கை

கிழக்குத் திருச்சுற்று 

வடகிழக்கு மூலையில் ஒன்பது கோள்கள் (நவ கிரகங்கள்). அதை அடுத்து காகத்துடன் சனி, பைரவர், திருமால், சங்கரநாராயணர் சிலைகள்.

பைரவர் 

முன் வலக்கையில் சூலமும், இடக்கையில் மண்டையோடும், பின் வலக்கையில் உடுக்கையும், இடக்கையில் நாகமும் ஏந்தி சுடர்முடியுடன் (ஜுவாலா மகுடம்) மேற்கு நோக்கி நிற்கிறார். அவருடன் இருக்கும் வாகனமான நாய் இல்லாதது மரபிலிருந்து மாறுபாடு.

பைரவர் 

திருமால் 

இங்குள்ள சிற்பங்களில் சில ஆழமற்ற பலகைச் சிற்பங்களாக உள்ளன. திருமாலின் சிற்பம் அதில் ஒன்று. வலது கையில் உள்ள ஆழி முன்னோக்கி செல் ஆழியாக (பிரயோக சக்கரம்) உள்ளது. இடது கையில் சங்கு. இரு கைகளின் முத்திரை வழக்கத்தில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. சுண்டு விரலும், கட்டை விரலும்  மட்டும் நீண்டு மற்ற மூன்று விரல்கள் மடிந்து உள்ளன. ஆயுதங்கள் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் ஏந்தப்பட்டுள்ளன.  வலது முன்கை கட்டை விரல் தவிர்த்த மற்ற நான்கு விரல்களும் மடிந்து கடக முத்திரை கொண்டுள்ளது. இடது முன்கை ஆடையினுள் மறைந்துள்ளது. தொடை அல்லது இடுப்பின் மீது இருக்கலாம்.

திருமால் 

சங்கர நாராயணர் 

வலது கையில் சூலமும், இடது கையில் சங்கும் ஏந்தி உள்ளார். மகுடத்திலும் வல, இடப் பகுதிகளுக்கு இடையில் வேறுபாடு தெரிகிறது.

சங்கர நாராயணர்

தெற்கு திருச்சுற்று 

தெற்குத் திருச்சுற்றில் ஏழு கன்னியர்கள், முருகர், நால்வர், ரமணர், திருஞானசம்பந்தர் சிலைகள் வடக்கு நோக்கி உள்ளன.

ஏழு கன்னியர்

யோக பட்டத்துடன் யோகாசனத்தில் வீரபத்திரர்
  1. அக்க மாலையும், கமண்டலமும் ஏந்திய நான்கு முக பிராம்மி 
  2. மழுவும் மானும் தாங்கிய மகேசுவரி 
  3. சக்தி ஆயுதமும், இருதலைச் சூலமான வஜ்ராயுதமும் கொண்ட கௌமாரி 
  4. ஆழியும், சங்கும் சூடிய வைஷ்ணவி 
  5. தண்டம், கலப்பைகளை கையில் எடுத்த பன்றி முக வராகி 
  6. இருதலைச் சூலமான வஜ்ராயுதமும், அம்பும் சுமந்த இந்திராணி 
  7. பின் கைகளில் உடுக்கை, பாசமும், முன்கைகளில் சூலம், மண்டையோடும் வைத்திருக்கும் சாமுண்டி 
முன் அறுவரும் முன் வலது கை  அபயம் காட்ட, முன் இடது கையை தொடைமீது வைத்துள்ளனர்.  




முருகர் 

வள்ளி, தெய்வானையுடன் முருகர். பொதுவாக கிழக்கு முகம் கொள்ளும்  முருகர் இங்கு வடக்கு நோக்கியுள்ளார். இராமலிங்க வள்ளலார் இவரைப் பாடியுள்ளார்.

வள்ளி, தெய்வானையுடன் முருகர்
நால்வர் 

நால்வர்

ரமணர் 

திருவலஞ்சுழி வேங்கடராமன் 1896 இல் திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த கோயிலில் தியானம் செய்துள்ளார். பின்னால் ரமண மகரிஷி என உலகப் புகழ் பெற்றார்.

ரமணர் 

திருஞானசம்பந்தர் 

ஒப்பிலாமணீசுவரரைப் பாடிப் பெருமைசேர்த்ததால் நால்வரில் மட்டும் இல்லாமல் தனியாகவும் ஒரு சிலை.

திருஞானசம்பந்தர்

மேற்குத் திருச்சுற்று -  தென் பகுதி 

இங்கு தல விநாயகரும், காசி விஸ்வநாதர், விசாலாட்சியும்  உள்ளனர். 

திருமுன் (சந்நிதி)

திருமுன் - வட பகுதி 

திருநடை மண்டபங்கள் திருமுன்னோடு இணைந்தோ அல்லது சிறிது இடைவெளி விட்டோ அமையும். வெளிச்சம் இன்மை, குறைவு இவ்வகை அமைப்புகளின் இயல்புகள். இந்தக் கோயிலில் திருமுன்னுக்கும் திருநடை மண்டபத்துக்கும்  இடையே அகன்ற இடைவெளி உள்ளது. இது தனித்தன்மையானது, இதனால் திருநடை மண்டபம் பகலில் நல்ல வெளிச்சம் பெற்று விளக்குகளின் தேவையின்றி உள்ளது.

கோமுகை 

விமானம் இரு தளம் கொண்டது.  கிரீவம் எனும் கழுத்துப் பகுதியும், சிகரம் எனும் தலைப் பகுதியும் எட்டு பட்டைகளாய் திராவிட அமைப்பைக் கொண்டுள்ளன.

விமானம் 

விமானத்தின் தென்புறம் 

விமானம் அடித்தளம் முதல் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள லிங்கோத்பவர் கோட்டத்தைக் கொண்ட பத்தி சாலைப் பத்தி என்றும், இரு பக்கங்களிலும் உள்ள பத்திகள் கர்ண பத்தி என்றும் அழைக்கப் படுகின்றன.  இந்த பத்தி அமைப்பு கருவறை விமானத்திற்கு அழகைத் தருகிறது. உபதளம் மீது பிரதிபந்த வகை தாங்குதளம் அமைந்துள்ளது. 

கருவறைக் கோட்டச் சிற்பங்கள் 

நான்முகன்  (மேற்கு)


லிங்கோத்பவர் (கிழக்கு)

லிங்கோத்பவர் 

தட்சிணாமூர்த்தி (தெற்கு)

தட்சிணாமூர்த்தி 

நர்த்தன விநாயகர் (தெற்கு)

நர்த்தன விநாயகர் 

சண்டிகேசுவரர் சந்நிதி 

திருமுன்னுக்கும் திருநடைப்பத்திக்கும் இடையில் கிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சண்டிகேசுவரர் சிற்பம் அழகியது. கேசம் ஜடாமண்டலமாகவும், மிகுந்த முடி ஜடையாக இடது தோளில் தொங்கிக்கொண்டும் உள்ளன. கழுத்தில் கழுத்தில் அழகிய அணிகள். பட்டையான முப்புரிநூல். உதரபந்தம். வலது கையில் மழு (கோடாலி).

சண்டிகேசுவரர் 

திருமுன்னின் உள்ளே 

திருமுன்னின் உள்ளே 

திருமுன்னின் உள்ளே முதலில் மகாமண்டபம். இருபுறமும் நடுவில் அகன்று திண்ணைகள் உடைய மாடங்கள் போல உள்ளன. முகத்தை இடப்பக்கம் திருப்பிய நந்தி. அர்த்த மண்டபத்தில் கருவறை வாயிலில் வாயிற்காவலர்கள். கருவறை உள்ளே ஒப்பிலாமணீசுவரர் லிங்க ரூபமாய் உள்ளார். தான்தோன்றி (சுயம்பு) என்றும் ருத்ராட்ச பந்தலின் கீழ் உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

மற்ற புராணங்கள்

  • நீலகண்டமுனிவர் என்பவர் இங்கு சிவனை எண்ணித் தவமிருந்து தீச்சொல். தொலைத்தாராம். அவர் வேண்டுகோளுக்கு இணங்கியே  சிவன் இங்கு கோயில் கொண்டாராம்.
  • திருக்கோயிலூர் மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் என்னும் இரு நாயன்மார்களுடைய ஊர். 
நன்றிக்கடன்


ஜேஷ்டா தேவி பற்றி விரிவான விளக்கங்கள், படங்களுக்கு சொடுக்கவும்: ஜேஷ்டா தேவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்