நெடுங்குணம் 4: யோக ராமர் கோயில் - பொதுச் சிற்பங்கள்
இப்பகுதியில் யோக ராமர் கோயிலில் உள்ள கடவுளர் அல்லாத மற்ற சிற்பங்களைப் பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர்
செங்கமலவல்லி தாயார் மகா மண்டபத்தில் இரு தூண்களில் எதிர் எதிராக கிருஷ்ணதேவராயர் சிற்பங்கள் உள்ளன.
தொங்கும் தாமரை
ஊஞ்சல் மண்டபத்திலும், கல்யாண மண்டபத்திலும் கூரையில் உள்ள தொங்கும் தாமரைச் சிற்பங்கள் சிறப்பானவை..
படிகளின் பக்கங்கள்
ராஜ கோபுர முன்புற வாசல்
ராஜ கோபுர முன்புற வாசலின் இருபுறமும் அழகிய சிறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலே ஆழியும் சங்கும். ஆழியின் மேல் கபோதத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பது போல் ஒரு சிற்பம். அவற்றின் கீழே இரு வரிசைகளில் இரு பக்கமும் சிறு சிற்பங்கள் உள்ளன. வாழை மரங்கள் முன்னாள் கோகுலாஷ்டமியின் எச்சங்கள்.
தூண்கள்
கல்யாண மண்டபத்தின் முகப்பை நுண் வேலைப்பாடுகள் அமைந்த யாளி வீரர்கள் தூண்கள் அழகு செய்கின்றன.
![]() |
கல்யாண மண்டபம் - யாளித் தூண்கள் |
கல்யாண மண்டபத்தின் தாங்குதளம்
கல்யாண மண்டபத்தின் தாங்குதள கண்டப் பகுதியில் ஆடல் பாடல் காட்சிகள் உள்ளன. மத்தளங்களும் தாளங்களும் முழங்க கோலாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நங்கையர். தாங்குதளத்தின் குமுதம், பத்ம ஜகதி, கபோதம் ஆகியவையும் நுணுக்கமாக அழகு செய்யப்பட்டுள்ளன.
![]() |
கல்யாண மண்டப தாங்குதளம் |
பெண்கள்
ஆண் பெண்
தாயார் திருமுன்னில் உள்ளவை
வினோத உருவங்கள்
பொதுமக்கள்
விலங்குகள்
மொத்தத்தில் நெடுங்குணம் யோக ராமர் கோயில் ஒரு முழுமையான அழகிய நிறைவு தரும் கலைக்கோயிலாகத் திகழ்கிறது.
நெடுங்குணத்தின் சிறப்புகளைப் பற்றிய மற்ற பதிவுகளின் சுட்டிகள் கீழே:
கருத்துகள்
கருத்துரையிடுக