பயணம்
சென்ற முறை இந்த ஊருக்கு வந்தபோது (25/08/2019) யோக ராமர் கோயிலுக்கு மட்டும்தான் செல்லும் ஊழ் அமைந்தது. இந்தக் கோயில் மற்றும் நெடுங்குணத்தின் மற்ற காணவேண்டிய இடங்களைக் காண 25/02/21 அன்று நெடுங்குணம் பயணமானேன்.
தீர்க்காசலேசுவரர் கோயில்
யோக ராமர் கோயிலுக்கு எதிரில் சாலையின் மறுபுறத்தில் தீர்க்காசலேசுவரர் கோயில் அமைந்துள்ளது. மலையின் பெயரே இறைவனின் பெயர். அம்மன் பெயர் பாலாம்பிகை.
வாயில், மதில்கள்
கிழக்கிலும் மேற்கிலும் வாயில்களுடன் கூடிய மதில் சுவர். மேற்கு வாயிலின்மீது மட்டும் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
 |
மேற்கு வாயில் |
 |
கிழக்கு வாயில் |
கிழக்கு வாயில் தூண்களில் சில குறிப்பிடத்தக்க சிற்பங்கள் உள்ளன:
 |
ஊர்த்துவ தாண்டவம் |
 |
பைரவர் |
 |
யோக தட்சிணாமூர்த்தி |
 |
காமாட்சி |
விமானம், இணைந்த மண்டபங்கள்
கீழை நுழைவாயிலை அடுத்து முன் மண்டபம். அடுத்து மகா மண்டப்ம், அர்த்த மண்டபம்.
இரு தல வேசர விமானம். பாத பந்த அதிஷ்டானம், பிரம்ம காந்தத் தூண்கள் பித்தியில் இரு கர்ண பத்திகள், நடு சாலைப் பத்தியை பிரிக்கின்றன. பத்திகள் பத்ரம் கொண்டுள்ளன. குமிழ் போதிகைகள். தேவ கோட்டங்கள் சாலை மேற்பகுதியைக் கொண்டுள்ளன. பூமிதேசம் தெளிவாக இல்லை. மிருகங்கள், பூதங்களின் கலவையாக இருப்பது போலத் தெரிகிறது. ஹாரம் ஆறங்க கர்ண கூடங்களும் சாலையும் பெற்றுள்ளது. ஹாராந்தரத்தின் கபோதத்தில் ஒரு நாசி உள்ளது. கோட்டம் இல்லை. இரண்டாம் தலப் பித்தியின் மேல் மூலைகளில் இரு நந்திகள் அமர்ந்துள்ளன. நான்கு மகா நாசிகள். தரைத் தல தேவ கோட்டங்கள், ஹார, கிரீவ கோட்டங்களில் மேற்கில் நின்ற நிலை திருமால், அம்ர்ந்த நிலை திருமால், நரசிம்மர்; தெற்கில் மூன்றிலும் தட்சிணாமூர்த்தி;
 |
விமானம் - மேற்குப் பக்கம் |
 |
விமானம் - தெற்குப் பக்கம் |
விமான தரைத் தலமும் அர்த்த மண்டபமும் கல் கட்டுமானங்கள். மகா மண்டபம் அதிஷ்டானத்திற்கு மேல் செங்கல் கட்டுமானம்.
 |
விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் |
கருவறையில் லிங்கம் தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளது.
 |
தீர்காசலேசுவரர் |
முன் மண்டபத்தின் தென் கிழக்கு மூலையில் ஒரு பாதாள அறை உள்ளது. அதில் ஒரு லிங்கம் வைக்கப்பட்டுள்ளது.
 |
திருச்சுற்று மண்டபம் |
 |
திருச்சுற்றில் இருந்து நெடுங்குன்றம் |
ஒற்றைத் திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் இரு தவ்வைச் சிற்பங்கள், துர்க்கை, யோக தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், நந்தியுடனான அஷ்டலிங்கம் ஆகிய பழமையான சிற்பங்கள் உள்ளன.
 |
துர்க்கை |
 |
யோக தட்சிணாமூர்த்தி |
 |
சப்த கன்னியர் |
 |
தவ்வை 1 |
 |
தவ்வை 2 |
 |
அஷ்டலிங்கம், நந்தி |
மேற்கு பகுதியில் வலம்புரி விநாயகர், சீனிவாசப் பெருமாள், அய்யப்பன், முருகர் சந்நிதிகள் சமீப காலத்தில் எழுப்பப்பட்டுள்ளன.
 |
வள்ளி தெய்வானையுடன் முருகன் |
முன் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் இருந்த அம்மன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
நெடுங்குணத்தின் சிறப்புகளைப் பற்றிய மற்ற பதிவுகளின் சுட்டிகள் கீழே:
கருத்துகள்
கருத்துரையிடுக