நெடுங்குணம் - 7: பூமால் செட்டி குளம், ஆங்கிலேயர் சின்னங்கள், மலை மாதா கோயில்

பூமால் செட்டிக் குளம்

நெடுங்குணம் ஊரைத் தாண்டியதும் சிறிது தூரத்தில் மூன்று பக்கங்களில் மரங்களால் சூழப்பட்ட ஒரு குளம்.

பூமால் செட்டிக் குளம்

தகவல் பலகை

நெடுஞ்சாலையின் மேற்கே 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பூமால் செட்டிக் குளம் இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குளம் தீர்க்காசலேசுவரர் கோயிலுக்கு உரியது. பங்குனி மாதம் இக்கோயிலில் உள்ள முருகரின் தெப்ப உற்சவம் இக்குளத்தில் நடைபெற்று வருகிறது.

ஆங்கிலேயர் கால வரலாற்றுச் சின்னங்கள் 

பூமால் செட்டிக் குளத்தின் மேற்கு கரையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பயணியர் விடுதி ஒன்று சிதைந்து காணப்படுகிறது. இது 15 ஆண்டுகள் முன்புவரை பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிகிறது.  

பாழடைந்த நெடுங்குணம் பயணியர் விடுதி

அதன் அருகில் சுமார் 10 அடி நீளமுள்ள 2 பீரங்கிகள் உள்ளன. இவை 18 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற வந்தவாசி போரின் போது பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

பீரங்கிகள்

மலை மாதா கோயில்

நெடுங்குணம் மலையின் தெற்கிலுள்ள சிறு குன்றில் அமைந்துள்ளது மலை மாதா கோயில் என்று அழைக்கப்படும் தூய லூர்து அன்னை தேவாலயம். ஃபிரான்சு நாட்டில் 1835 ஆம் ஆண்டு பிறந்த அருட்தந்தை தாராஸ் அடிகளார் இறைப்பணிக்காக பாண்டிச்சேரி வந்தார். பின்னர் சேத்துப்பட்டை தன் கர்மபூமியாகக் கொண்டு அங்கு தன் வாழ்வின் இறுதிவரை இறைத்தொண்டு ஆற்றினார். லூர்து அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்ட அவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த குன்றின் மீது அன்னைக்கு இந்த சிறிய ஆலயத்தை எழுப்பினார், பின்னர் 1896 ஆம் ஆண்டு தற்போது சேத்துப்பட்டில் உள்ள அன்னையின் பேராலயத்தை எழுப்பினார்.  

மலை ஆலயத்திற்கு சுமார் 260 படிகள் உடைய வழிப்பாதை உள்ளது. 

மலை மாதா கோயில் நுழைவாயில் வளைவு

சிறிய செவ்வக வடிவிலான தேவாலயம். உள்ளே லூர்து அன்னையின் திருவுருவம் உள்ளது. 

மலை மாதா கோயில் முன்புறத் தோற்றம்

மலை மாதா கோயில் பக்கத் தோற்றம்

லூர்து அன்னை சிலை

மலை உச்சியில் ஒரு சிலுவை வைக்கப்படுள்ளது. 

மலை உச்சியில் சிலுவை

மாதந்தோறும் முழுநிலவு தினத்தன்று மாதா மலையைச் சுற்றி அமைந்துள்ள சாலையில் மரிவலம் எனும் கிரிவலம் நடைபெறுகிறது

நெடுங்குணத்தின் சிறப்புகளைப் பற்றிய மற்ற பதிவுகளின் சுட்டிகள் கீழே:



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்