செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பாகம் 1 - அமைப்பும் சிற்பங்களும்
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தின் தலைநகர் செங்கம். செய்யாற்றின் தென்கரையில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக 33 கிமீ தூரம்.
இலக்கியத்தில் செங்கம்
மலைபடுகடாம் பத்துப்பாட்டு எனும் சங்க கால் தொகுப்பில் உள்ள பத்தாவது நூல். ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது தலைவன் ஒருவனிடம் பரிசில் பெற்ற விறலியர், பாணர், கூத்தர், பொருனர் முதலியோருள் ஒரு கலைஞன் வேரொருவனுக்குத் அத்தலைவனது பெருமையைக் கூறி, அவன் ஊருக்குச் செல்லும் வழியைச் சொல்லி வழிகாட்டுவதாகும் (ஆற்றுப்படுத்துவது). மலைபடுகடாம் 'இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்' என்ற புலவர் 'பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்' என்பவனைப் பாடியது. செங்கண்மா இன்றைய செங்கம். (இந்த நன்னன் சங்க இலக்கியங்கள் வசை பாடும் பெண்கொலை புரிந்த நன்னன் அல்ல). சங்க காலத்திற்குப் பின் செங்கம் குறிப்பிடத்தக்க தனி வரலாறு கொள்ளவில்லை.
சிறப்பு
- நாயக்கர் கால வேணுகோபால பார்த்தசாரதி கோயில்
- அதன் ராமாயண ஓவியங்கள்
- சோழர் கால ரிஷபேசுவரர் கோயில்
- மகாவீரர் சிலை
- சுற்றியுள்ள இடங்களில் உள்ள நடுகற்கள்
வேணுகோபால பார்த்தசாரதி கோயில்
கோயில் செய்யாற்றின் கரையில் ரிஷபேசுவரர் கோயிலுக்கு மேற்கே, செங்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை அடுத்து அமைந்துள்ளது.
தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கன் தந்தை திம்மப்ப நாயக்கர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் ராஜப் பிரதிநிதியாக இருந்தார். அப்போது செங்கத்திற்கு வரி வசூல் செய்ய்ய வந்த தளவாய் நாயக்கன் என்ற குறுநில மன்னர் சுமார் 1600 -ஆம் ஆண்டு இந்தக் கோயிலைக் கட்டினார். தளவாய் நாயக்கனின் சிலை கோயில் முன் மண்டபத்தில் உள்ளது.
![]() |
தளவாய் நாயக்கர் |
பொ.ஆ. 1632 கல்வெட்டு இக்கோயில் இறைவனை 'அர்ச்சுன சாரதியான கோபால கிருஷ்ணசாமி' என்று அழைக்கிறது.^
கோயில் அமைப்பு
- 5 நிலை ராஜகோபுரம்
- ஒரு திருச்சுற்று
- மூன்று நிலை விமானமும், அர்த்த மண்டபமும், மகா மண்டபமும், முக மண்டபமும் கொண்ட மையக் கோயில்,
- திருச்சுற்றில் ஒரு சிறு கோபுரம், தென் மேற்கே ? சந்நிதி, மேற்கில் கல்யாண மண்டபம், வடக்கில் ராமானுஜர்
ராஜ கோபுரம்
![]() |
ராஜ கோபுரம் |
![]() |
ராஜ கோபுரம் - தரைத் தளம் |
ஐந்து நிலை ராஜ கோபுரத்தின் தரைத் தளம் கல்ஹாரமாகவும், மேற் பகுதிகள் செங்கல் கட்டுமானமாகவும் உள்ளன. தரைத் தள தேவ கோட்டங்களில் சிலைகள் இல்லை. ஆனால், மேல் தளங்களைச் சுதைச் சிற்பங்கள் அழகு செய்கின்றன. 2,3,4 ஆம் தள வாயில்களின் இருபுறமும் வாயிற்காவலர்கள். 3 ஆம் தளத்தில் வடக்கிருந்து தெற்காக தசாவதாரச் சிலைகள்.
கட்டடக் கலை: பிரதிபத்ர வகை உபபீடத்தின் மீது கபோதபந்த வகை அதிஷ்டானம். இரு கர்ண பத்திகளும், வாயிலை உள்ளடக்கிய மைய சாலைப் பத்தியும், மைய சாலைப் பத்திக்கும் கர்ண பத்திகளுக்கும் இடையே இரு சாலைப் பத்திகளும் உடைய பித்தி பாகம். பக்க சாலைப் பத்திகளில் சிலைகள் அற்ற தேவ கோட்டங்கள் உள்ளன. மேல் தளங்களிலும் சொறுவுசாலை உடனான மைய சாலை, இரு பக்க சாலைகள், இரு கர்ண கூடங்கள் கொண்ட ஹாரங்கள்.
நிலைக்கால்களில் அழகிய நதிப் பெண்கள். அவர்கள் தலைமேல் நீளும் கொடிக்கருக்கு வட்டங்களில் இருபுறமும் தசாவதாரச் சிற்பங்கள் - மச்சாவதாரம் முதல் கீழிருந்து மேலாக. நிலைக்கால்களில் எண்மர், மேலே உத்தரத்தில் இருவர்.
திருசுற்று
ராஜ கோபுரத்தை அடுத்து ஒரு சிறிய இரு தள விமானம். மதில் இன்றித் தனியாக நிற்கிறது.
அங்கு ஒரு வாயிற்காவலர் சிலை உள்ளது. கூட இருந்தவர் பின்னப்பட்டுப் போனதால், அவரை வெளியேற்றி இவரை இங்கு வைத்து விட்டனராம். புதிதாய் இரு சிலைகளை நிர்மாணித்துள்ளனராம். அர்ச்சகர் தகவல்.
![]() |
ஜெயன் |
தென் மேற்கில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சந்நிதி.
மையக்கோயில்
![]() |
விமானம் மேற்குப் பார்வை |
கட்டடக் கலை: மூன்று தள, கலப்பு வேசர விமானம்.பிரதிபத்ர வகை உபபீடத்தின் மீது பத்ம ஜகதியும் கபோதமும் கொண்ட ஸ்ரீபெந்த அதிஷ்டானம். ஆறு தூண்களால் பிரிக்கப்பட்ட இரு கர்ண பத்திகளும், சாலைப் பத்தியும், உடைய பித்தி பாகம். வேதி உண்டு. 8 பட்டை விஷ்ணுகாந்த அரைத் தூண்கள். பத்ம மண்டி. மதலை, நாணுதல் கொண்ட போதிகை. பத்ம வலபி. சாலைப் பத்திகளில் சிலைகள் அற்ற தேவ கோட்டங்கள் உள்ளன. கபோதம் முழுவதும் மணித் தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாசிகளின் காடங்களில் குறுஞ் சிற்பங்கள், பெரும்பாலும் அமர்ந்த சிம்மங்கள், சில நாட்டியப் பெண்கள். மேல் தளங்களிலும் சொறுவுசாலை உடனான மைய சாலை, இரு பக்கக் கர்ண கூடங்கள் கொண்ட ஹாரங்கள். நான்கு மகா நாசிகள், நான்கு அனுநாசிகள்.
விமானம் கண்ணுக்கினிய வண்ணங்கள் பூசிய அழகிய சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் தளத்தில் தென்கிழக்கில் இருந்து வரிசையாக தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன. மூன்றாம் தளத்தின் மேல் நான்கு மூலைகளிலும் கருடன்.
![]() |
பிரநாளம் |
முக மண்டபம்
இந்தக் கோயிலின் சிறப்பம்சம் முக மண்டபம். கூரையின் மேல் சுதை ஹாரம். நடுவில் விரிந்த கூடம் உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அழகிய வேலைப்பாடுகள் உடைய தூண்கள், சிற்பங்கள் கொண்டது. நடுவில் சதுர வடிவிலான தொங்கு தாமரை அலங்காரத்தையும். அதைச் சுற்றி ராமாயண யுத்த காண்ட ஓவியங்களுடைய விதானம்.
![]() |
மண்டப முற்றம் |
![]() |
யாளி வீரனின் வால் தூணின் மீது காடாபாடிருப்பது சிறப்பு |
![]() |
மூலைத்தூண் |
![]() |
கொடுங்கை |
மண்டபச் சிற்பங்கள்
![]() |
பகாசுரன் வாயைப் பிளக்கும் கண்ணன் |
![]() |
கம்சன் யாக மேடையில் வில்லை முறிக்கும் கண்ணன் |
![]() |
காலிங்க நர்த்தனம் |
![]() |
பாலகிருஷ்ணன் |
![]() |
வேணுகோபாலன் |
![]() |
பார்த்தசாரதி |
![]() |
இரண்ய வதம் |
![]() |
யோக நரசிம்மர் |
![]() |
பூவராகர் |
![]() |
லக்ஷ்மி நாராயணர் |
![]() |
திருமால் |
![]() |
கஜேந்திரனுக்கு அருள் புரியும் திருமால் |
![]() |
கருட வாகனராய்த் திருமால் |
![]() |
மன்மதன், ரதி |
![]() |
தேவி |
![]() |
அரசி |
![]() |
அரச குடும்பத்தினர் |
இரண்டாம் பகுதி:
செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்: பகுதி 2 - ராமாயண ஓவியங்கள்
*செங்கண்மாவே செங்கமானது: தோஷம் நீங்க ராமர் வழிபட்ட கோயில்; தினகரன்
^செங்கம் - அர்ச்சுன பார்த்தசாரதி கோயில் ஓவியங்கள்; திருவண்ணாமலை மாவட்டத் தடயங்கள்;மணிவாசகர் பதிப்பகம்;2016
துணை
^செங்கம் - அர்ச்சுன பார்த்தசாரதி கோயில் ஓவியங்கள்; திருவண்ணாமலை மாவட்டத் தடயங்கள்;மணிவாசகர் பதிப்பகம்;2016
கருத்துகள்
கருத்துரையிடுக