செங்கம் நடுகற்கள்: ராதாபுரம் - விஜயநகர கால வீரனும். குடும்பமும்
ராதாபுரம் திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ள ஊர். திருவண்ணாமலையில் இருந்து செல்லும்போது ஊருக்கு முன் இந்த மசூதி வளாகத்தை காணலாம்.
அதை அடுத்து சிறிது தூரத்தில் இந்த மைல்கல்லைக் காண்க.
இங்கு சாலையின் வலதுபுறம் (வடக்கே) உள்ள ஒரு வயலில் ஒரு பாறையின் மீது இரு நடுகற்கள் அமைந்துள்ளன. இந்த நடுகற்களில் கல்வெட்டு எதுவும் இல்லை. இது 'செங்கம் நடுகற்கள்' நூலிலும் ஆவணப்படுத்தப்படவில்லை.
![]() |
நடுகல் |
![]() |
? சதிக்கல் |
2018 இல் இந்த கற்களைப் பார்வையிட்ட தொல்லியல் வல்லுனர்கள் குழந்தைகளோடு இருக்கும் பெண் சிற்பம் சதிக்கல்லாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் பலகை:
![]() |
தகவல் பலகை |
நடுகல்லின் பழைய நிலைமையும் புனரமைப்பும்
'டெக்கான் ஹெரால்ட் செய்தித் தாள் செய்தியின்படி ஜூன் 2018 இல் இரு கற்களும் பறையின் மீது சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. சிதியில் இருந்து அப்போதைய படம்:
![]() |
2018 இல் நடுகற்கள் (படம் நன்றி: https://www.deccanchronicle.com/nation/in-other-news/200618/rare-sati-stone-heros-memorial-found-in-tiruvannamalai-district.html) |
அவற்றை மேற்கண்டவாறு நிறுவி, தகவல் பலகையும் வைத்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்.
அப்படியே ஊருக்குள் சென்றால் சாலையின் இடதுபுறம் ஒரு பழமையான அங்காளம்மன் கோயில் புது கோபுரமும் மதிலும் பெற்று காட்சியளிக்கிறது.
![]() |
ராதாபுரம் அங்காளம்மன் கோயில் |
![]() |
அங்காளம்மன் கோயில் |
துணை
செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972
https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ தகவல் பலகை
கருத்துகள்
கருத்துரையிடுக